மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-111
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
நாடோடி மன்னன் வசனம் தொடர்ச்சி….
ராஜகுரு : அப்படியென்றால் பணக்காரர்களே இருக்கமாட்டார்கள்….!
வீராங்கன் : இல்லை. பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்கமாட்டார்கள்.
மந்திரி : ஐந்து வயது ஆன உடனேயே குழந்தைகளைக் கட்டாயம் பள்ளியில் சேர்த்துவிட வேண்டும். தவறினால் பெற்றோர்களுக்கு தண்டனை உண்டு.
கார்: வசதி இல்லாத பெற்றோர்கள் என்ன செய்வது ?
வீராங்கன் : அவசரப்படாதீர்கள்.
மந்திரி : பள்ளிப் படிப்பு முடிந்ததும் தொழிலில் ஈடுபடும்வரை மாணவர்களின் பராமரிப்புப் பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளுகிறது.
பிங்: (கிண்டலாக) பொக்கிஷம் காலி! பணத்தை மக்களுக்காகச் செலவழிக்கிறோம்.. ம்… படியுங்கள்.
மந்திரி : கலப்பு மணம் செய்பவருக்கு அரசாங்கச் செலவில் திருமணம் செய்து வைக்கப்படும். கலப்பு மணத்தால் பிறக்கும் குழந்தைகளுக்கு அரசாங்க உத்தியோகத்தில் முதல் சலுகை அளிக்கப்படும…. பிச்சையெடுப்பதும் குற்றம். பிச்சையிடுவதும் குற்றம். விவசாயிகள் குடும்பம் ஒவ்வொன்றுக்கும் ஒரு வீடு, ஐந்து காணி நிலம், இரண்டு காளை, நாலு கோட்டை விதைகள், ஒரு கலப்பை தரப்படும்.
ராஜகுரு : விவசாயிகளைப் பார்க்கிறார் மன்னர். நகரத்தைப் பற்றிக் கவலையே படவில்லையே!
எதிர்க்கட்சியிலொரு சிஷ்யன் : நகரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு உதவியும் இல்லையா ?

Add a Comment