POST: 2017-10-25T06:53:23+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-112
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================

நாடோடிமன்னன் வசனம் தொடர்ச்சி……

மற்றொரு சிஷ்யன் : அவர்களைப் பற்றி எங்கே கவலைப்படப் போகிறார்கள் ?

வீராங்கன் : முழுவதையும் கேளுங்கள்.

மந்திரி : …. அதைப் போல் …. நகரத்தில் வாழ்பவருக்கு திறமைக்கு ஏற்ற தொழில் கொடுக்கப்படும். ஒவ்வொருவருக்கும் தேவைக்கு ஏற்ற ஊதியம் கொடுக்கப்படும்.

மக்களில் ஒருவன் : இதல்லடா சட்டம் ?

மந்திரி : ஆண்டான் அடிமை, தாழ்ந்தவன், உயர்ந்தவன், தொட்டால் தீட்டு, கைப்பட்டால் பாவம், வீதியில் நடக்கக்கூடாது, கோயிலில் நுழையக்கூடாது, பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கக்கூடாது என்று யார் சொன்னாலும் இரண்டாண்டுகளுக்குக் குறையாமல் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும்.

(மக்கள் ரொம்பவும் மகிழ்ச்சியடைகின்றனர்.)

மந்திரி : கற்பழித்தால் தூக்கு தண்டனை. எல்லாக் குற்றவாளிகளும் கருணை மனு சமர்ப்பிக்கலாம். ஆனால் கற்பழித்தவர்களுக்கு மட்டும் அந்த உரிமை கிடையாது.

பிங் : இந்த சட்டங்களை நாங்கள் எதிர்க்கிறோம்.

(அவன் கோஷ்டியினரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.)

வீராங்கன் : தேவை இல்லையா? இந்தச் சட்டங்கள் உங்களுக்காக மட்டும் இல்லை (மக்களைப் பார்த்து) உங்கள் அபிப்பிராயம் என்ன?

மக்கள் : எங்களுக்கு இந்தச் சட்டங்கள் தேவை.

வீராங்கன் : (பிங்களன் கோஷ்டியினரைப் பார்த்து) பார்த்தீர்களா? உட்காருங்கள்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *