POST: 2017-10-27T07:48:44+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-114
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
நாடோடி மன்னன் வசனம் தொடர்ச்சி…..

வீராங்கன் :
———————

ஒரே ஒரு முடிவுக்குத்தான் வந்தேன். மக்களிலே ஒருவன் தலைவனாகும் வரை மன்னராட்சி அக்கிரமத்துக்கு ஒரு முடிவு இருக்காதென்று அறிந்தேன்.

படையிலிருந்து விலகினேன். புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன்.

புரட்சி என்றதும் பயந்து விடாதே!
இது ஆளைச் சேர்க்கும் ஆயுதப் புரட்சி அல்ல.
அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை.

ஆனால் நாங்கள் தீயிடுவோம், தீமைக்கு. கொள்ளையடிப்போம், மக்கள் உள்ளங்களை, குவித்து வைத்து அனுபவிப்போம், அறிவுப் பொருள்களை…. கத்தி எடுக்காத, ரத்தம் சிந்தாத, அறிவுப் புரட்சியில் பொல்லாமையைப் போதித்து, மக்கள் குணத்தை மாற்றினேன்.
அதை ‘கொடுமை’ என்றது உங்கள் ஆட்சி.

பிடிபட்டேன் ஒரு நாள். உதைபட்டேன், சிறையில் வதைபட்டேன். பாராளும் மன்னனாகப் பார்க்கிறாயே இப்போது, அவன் சிறையிலே இருந்தபோது பாராளுவோர் தந்த பரிசுகள் சூடு; பார் சகோதரி, பார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *