மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-115
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
நாடோடி மன்னன் வசனம் தொடர்ச்சி…..
வீராங்கன் :
———————
‘செல்வந்தர் வீட்டு மாடுகளுக்கு வைத்திய வசதி உண்டு. ஏழை அதனினும் இழிந்தவனா உன் ஆட்சியில்?’ என்று கேட்டதற்கா இந்த தண்டனை. பட்டேனே பல துயரம், கெட்டேனா? பழிகாரனாக
மாறினேனா? நான் கொடியவனாக இருந்திருந்தால் உன் கற்பை எளிதில் சூறையாடி இருக்க
முடியும். இல்லை மனோகரி, இல்லை… நான் பலனளிக்கும் கருவியானேன்…
குழப்பம் செய்யும் கூட்டம் ஒரு புறம், என்னைக் கொலை செய்யத் துடிக்கும் கொடுமையாளர்கள் ஒரு புறம்; பருவத்தால் வாக்கினால், சிந்தனையால்
‘இவன் என் கணவனே’ என்று கலங்கும் நீ ஒரு புறம்; இதற்கிடையில்தான் வாழ்கிறேன் மன்னனாக….
பட்டுப் பட்டுத் தேறிய என் இதயம் தாங்கிக் கொள்ளும். ஆனால் என்னை உன் கணவனாக கருதி மகிழ்ச்சியோடு பார்த்தால் என்னால் தாள முடியாது சகோதரி, என்னால் தாள முடியாது… அதற்கும் இன்று ஒரு முடிவு வந்துவிட்டது. பாரம் இறங்கிவிட்டது.
நான் வருகிறேன்.

Add a Comment