மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-118
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
“அட்டாலும் பால் சுவையில் குன்றாது – சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்” என்ற
உவமைகள் கூறும் உண்மைகளை
“தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ” என்று பாடிக் காட்டினார்
புலித்தலையை நாய் மோத்தல் இல்
என்பது பழமொழி
சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ – என்பது புதுமொழி.
நேரு பெருமகனார் மறைந்த போது
இராச நேருவின் மார்பலங்கரித்த
ரோசா இனிமேல் மலருவதில்லை என்று
முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே
என்ற புறநானூற்று வரிகளைப் புதுப்பித்தார்.
புறநானூற்று புலவர்கள் பொய்யடிமையில்லாத
புலவர்களாயினும் அவர்களைக் கற்றவர்கள்
மட்டுமே கண்டறிந்தார்கள். அவர்களுடைய
கருத்துகளை அனைவருக்கும் அறிமுகப்படுத்திய
செந்தமிழ்த் தூதுவர், இலக்கியக் கோத்தும்பி
நம் கவியரசர் கண்ணதாசன்.

Add a Comment