POST: 2017-11-04T08:45:39+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-120
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================

நாடோடி மன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த பின்னர் 1959ம் ஆண்டில் வெளியிடப்பட்ட வெற்றிவிழா மலரில் புரட்சித்தலைவரைப் பற்றி கவியரசு கண்ணதாசனின் வாழ்த்துரை

எம்.ஜி.ஆர் ஓர் அதிசய மனிதர்
——————————————————

ஒரே மனிதனுக்குப் பல குணங்கள் இருப்பது உலக இயற்கை. அந்தக் குணங்களில் எதுவுமே உறுதியில்லாமலிருப்பதும் சில மனிதர்களுக்கு இயற்கை. ஆனால், எண்ணிய எண்ணத்தைத் திண்ணமாக்கிக் கொண்டு, எந்தக் காரியத்தையும் முடித்துவிட்டே தூங்குகிற மனிதரை நான் கண்டேன். அந்த அதிசய மனிதரே நாடோடி மன்னன் தயாரிப்பாளர், நடிகர், டைரக்டர் எம். ஜி. இராமச்சந்திரன்.

இப்போது ஒன்றேகால் ஆண்டுகள் ஆகிவிட்டன. நான் எழுதி, புரட்சி நடிகர் எம். ஜி. ஆர். நடித்து, “மகாதேவி” என்ற பெயரில் வெளிவந்த படம்; வெளி வந்த அன்றே, மக்களோடு மக்களாகப் படத்தைப் பார்த்துவிட்டுத் திரும்பினேன்.

தயாரிப்பாளர்கள் எவ்வளவுக்கு அந்தக் கதையைச் சிதைத்திருந்தார்கள். மிகவும் புண்பட்ட மனத்தோடு எம். ஜி.ஆரைக் கண்டேன். “இனி, நீங்களே முழுப் பொறுப்பேற்றுக் கொண்டு, தயாரிக்கும் ஒரு படம் வந்தாலொழிய, மக்கள் நம்பிக்கை நிலைக்காது” என்றேன்.

அப்பொழுது, மூவாயிரம் அடியிலேயே நின்ற “நாடோடி மன்னனை முடித்து விடுவது என்று
முழுமூச்சுடன் இறங்கினார், புரட்சி நடிகர்.

ஒராண்டுக் காலத்திற்குமேல் இடைவிடாது உழைத்தார். “பணம் எவ்வளவு ஆகிறது” என்ற கவலையின்றி, “படம் எப்படி உருவாகிறது” என்ற கவலையுடனேயே வேலை செய்தார்

வாகினி ஸ்டுடியோவில் ஒரு முழுப் படப்பிடிப்புக் கொட்டகையை வாங்கிக் கொண்டார். இரவிலே நான்கு மணி நேரம் தூக்கம் , மற்றப் பெரும் பொழுதும் ஸ்டுடியோவிலேயே கழித்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *