மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-121
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
சளைக்காமல் நடந்த படப்பிடிப்பு; ஓர் அற்புதமான படத்தைத் தமிழகத்துக்கு உருவாக்கித் தந்தது.
நான் எழுதிக் கொடுத்த கதை வேறு பிறகு, பார்த்த படம் வேறு இடையில் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு விதத்தில் படம் உருக்கொண்டது. கடிய சோதனைகளுக்கும் சளைக்காமல், படத்தைத் தயாரித்தார் எம்.ஜி.ஆர்.
அவருக்கு முன் சொந்தப் படத் தயாரிப்பில் பல நடிகர்கள் ஈடுபட்டிருந்தார்கள், அப் படி ஈடுபட்டதாலேயே பெரும்பாலோர் தொழிலிலிருந்து மறைந்தார்கள்.
இந்த உண்மை எம். ஜி.ஆருக்கும் தெரியும். புகழிலும், மக்கள் அவருக்கு அளிக்கும் மதிப்பிலும் பொறாமை கொண்ட பேய்க் காக்கைகள் வேறு, ஓயாமல் ஓலமிட்டுக் கொண்டிருந்தன.
“நமக்கு ஐம்பது நூறு கொடுக்க மாட்டாரா’ என்று எதிர்பார்த்து ஏமாந்த சோனகிரிகள், படம் வெளி வந்ததும், எம்.ஜி.ஆர். நாடோடியாகி விடுவார் என்று கதறினர்.

Add a Comment