மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-122
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
கூத்துநாய் கவ்விக் கொளக்கண்டும் தம்வாயால்
பேர்த்துநாய் கவ்வினார் ஈங்கில்லை
என்ற வரிகளுக்கேற்ப, கடிக்க வந்த நாய்களை அடிக்கக்கூட விரும்பாமல், தலை நிமிர்ந்து நடந்த எம்.ஜி.ஆர். இன்று நாடாளும் மன்னனாக விளங்குகிறார்.
தொழிலில் ஒப்பந்தமே இல்லாமல் அவரிடம் உறவு கொண்ட ஊழியர்கள் அதிகமாகவே அவரிடமிருந்து பெற்றிருக்கிறார்களே தவிர, குறைந்துப் பெறவில்லை!
பணத்தை விழுந்து கவ்விக்கொள்ளும் தீக்குணம் அவரிடம் இல்லை. “பணம் இன்று வரும் நாளை பறந்து போகும்” என்ற ‘நிலையாத் தத்துவத்தில்’ அவருக்கு நம்பிக்கை உண்டு.
கலைவாணருக்குப் பிறகு நடிகர் உலகில் இவர் அதிசயமான மனிதர், மக்களை அணைத்துக் கொள்ளப் பழகிவிட்ட எவரும் தனியாகச் சாவதில்லை! கோடானுகோடி மக்கள் அவரை என்றும் பின் தொடர்வார்கள்.
இதே புகமும் பெருமையும் அவர் வாழ்நாள் முழுதும் தொடரும், பெருமூச்சு விட்டுப் பயனில்லை! இது அவர் விழித்திருந்து உழைத்துச் சம்பாதித்த புகழ்!
நாளைய உலகம், நாளைய திராவிட சமுதாயம், கடந்த காலத்திற்கோர் கலைஞன் பெயரையும், வருங்காலத்திற்கோர் கலைஞன் பெயரையுமே உச்சரிக்கும்; ஒருவர் கலைவாணர் மற்றொருவர் புரட்சி நடிகர்.

Add a Comment