மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-129
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–
உன் கரத்திற்கு ஆயிரம் முத்தங்கள் பல நூறு ஆயிரம் முத்தங்கள்.
சிறகொடிந்து விழுந்துவிட்ட வானம்பாடியாகப் பட்டுத் துணிக்குள்ளே பதுங்கிக் கிடக்கிற உனது தாமரை முகத்தை நேற்றெல்லாம் பார்த்து நின்றேன்! பூமிக்கு வந்த நிலவு – வழி தெரியாமல் பிள்ளைத்தனமாகப் புழுதியிலே விழுந்து புரண்டது போல இருந்தது உன் முகம்!
“இன்னொருவன் எப்போது இங்கே பிறப்பானோ?
இப்படியோர் தோற்றம் எவர்க்கினிமேல் வாய்த்திடுமோ? என்று எழுதிய மகா ஞானியே!
பாடல் பொருளான பழந்தமிழ் வேதமே! விழி கொண்டு வேடிக்கை காட்டுகிறாய். வேதனை நெருப்பில் எங்களை வீசி விட உனக்கும் மனம் வருகிறதே! என்ன….. நியாயம்?
ஒளிப் பால் சிந்துகிற ஒய்யாரச் சந்திரனின் மஞ்சளுக்கு உதாரணம் சொல்லிக் கொண்டே வாழ்ந்த போதே வாடிப் போனவர்கள் உண்டு! கண்ணா! நீயோ சீதள இரவுகளில் மானிட விடியலுக்காகக் கவிதை மலர்களைத் தொடுத்த காவிய நாயகன்!
கூந்தல் அழகை மாத்திரம் நீ வருணித்தவன் அல்ல – குழி விழுந்த கன்னங்களிலும் உன் கவிதை முத்தம் மாறாமல் விழுந்திருக்கிறது.
மூன்றாம் பிறையைப் பார்த்ததும் ஆசைக்குரியவளின் நெற்றி மாத்திரம் உன் நினைவுக்கு வரவில்லை; காலக் காற்றில் ஆடிப்போன மனித மரங்களின் வளைந்து போன கூனல் முதுகும் உன் நினைவுக்கு வந்தது!

Add a Comment