POST: 2017-11-17T09:12:42+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-130
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–

சினிமாப்பாடல்கள் உன்னால்தான் சிரஞ்சீவித் தன்மை பெற்றன!

காஷ்மீரத்துப்பட்டு உனது தோளிலே தொத்திக் கிடந்தாலும், காஞ்சிபுரம் கைத்தறிதானே உனக்கு ஆடையாயிற்று!

எழுது கோலை அசைக்க ஆரம்பித்த நாள் தொடங்கி என்னை வாழ்த்திய என் தாயே! உன் மரணம் என்னை அனாதை போல ஆக்கிவிட்டது!

கோகலே மண்டபத்தில் – “கண்ணதாசன் ஜனாதிபதி மாதிரி சம்பளம் வாங்குகிறார் – இந்தியா மாதிரி கடன் வாங்குகிறார் என்று சொன்னதைக் கேட்டு,

“என் கவிதைகள் ஜீவிதமானவை – அதற்கு இவனொருவன் சொல்லுகிற விளக்கமே ஆனந்தமானது: அற்புதமானது- என்று வாழ்த்திய என் தாயே! இனி உன்னை என்றைக்குப் பார்க்கப் போகிறேன்!

அவனை எழுப்பாதீர்; அப்படியே தூங்கட்டும்

ஆழ்ந்த துயிலினிலே அமைதியினைக் காணட்டும்

அன்பு குழந்தையவன் அரையாண்டு சிறுவனவன்

இந்த வயதினிலே இப்பொழுது தூங்குவதே

சுகமான தூக்கம்! அவன் சுகமாகத் தூங்கட்டும்!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *