மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-131
—————-
==========================
கவியரசர் கண்ணதாசன்
==========================
வலம்புரிஜான் அவர்களின் இரங்கலுரை
—————————————————————–
கண்ணை விழித்திருத்த காசினியை காணூங்கால்
என்னத்துயர் வருமோ, எங்கெங்கு அடி விழுமோ
காதல் வருமோ, காதலுக்குத் தடை வருமோ
மோதல் வருமோ, முறை கெடுவார் துணை வருமோ
நன்றி இலா நண்பர்கள்தாம் நாற்புறமும் சூழ்வாரோ
நலமிழந்த பெண்ணொருத்தி நாயகியாய் வருவாளோ!
செய்யத்தொழில் வருமோ, திண்டாட்டந்தான் வருமோ
வெயில் அழைத்து வரும் வியர்வையிலே நீராடி
“ஐயா பசி” என்று அலைகின்ற நிலை வருமோ
என்ன வருமென்று இப்பொழுது யாரறிவார்?
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்!
கோடிக்கதிபதியெனக் குறையாது வந்தாலும்
நாட்டுத்தலைவனென நல்வாழ்வு பெற்றாலும்
கேட்ட பொருளெல்லாம் கிடைத்தாலும் அவன் வீட்டு மாட்டுக்கும் கூட மரியாதை கிடைத்தாலும் பிரச்னைகள் தீர்ந்தாலும் பால் பழங்கள் உண்டாலும் சொத்துள்ள காரணத்தால் தூக்கம் பிடிக்காது
அவனை எழுப்பாதீர், அப்படியே தூங்கட்டும்

Add a Comment