மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-138
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
புரட்சித் தலைவரை ஒரு நடிகர் என்கிற காரணம் காட்டி அவரை வெறுக்கிறவர்கள் மன நோயாளிகளே!
இந்த வகை வேப்பங்காய் வெறுப்பு-மருந்து மாத்திரைகளிலே மடங்கிப் போகிற வெறுப்பு அல்ல.
புரட்சித் தலைவரை ஒரு நடிகராக மாத்திரம் பார்ப்பதே மன்னிக்க முடியாத குற்றம்.
காரணம் அவர் ஒரு நடிகர் மாத்திரமல்ல – அவர் சொன்னதை எழுதிக் கொண்ட வசன கர்த்தாக்களும் உண்டு-அவர் பகிர்ந்தவைகளைப் பாடலாக வடித்த பாடலாசிரியர்களும் உண்டு – அவர் குறிப்பிட்டுச் சொன்ன கோணங்களில் பதிந்து-பாய்ந்த காமிராக்களே அதிகம்.
அவரே ஒரு தலை சிறந்த நடிகர்-வசனகர்த்தா -பாடலாசிரியர்-இயக்குனர்.
இந்தத் திரைப்படத் தொழிலுக்கும் அப்பால் அவரிடத்தில் நீறு பூத்த நெருப்பாக ஒளிந்து கிடந்த நூறுநூறு திறமைகள் தப்பித்து வெளியே வந்து தங்களை அடையாளங் காட்டிக் கொண்ட சந்தர்ப்பங்கள் பல உண்டு.
நடிகர் என்பதற்காக அவர்மீது காரணமில்லாத -இனந் தெரியாத-வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறவர்கள்-நடிப்பையே வெறுத்தவர்கள் அல்லர். அவரை வெறுத்தவர்கள்.

Add a Comment