POST: 2017-11-30T12:34:12+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-139
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================

காரணம் தமிழில் கடவுளே “கூத்தன்’ என்று தான் வழங்கப்படுகிறான்,, தில்லைவெளியில் தினமும் ஆடுகிறார் என்றுதான் பேசுகிறோம்.. “ஆடத் தெரியாத கடவுள் என்று இயேசுநாதர் அழைக்கப்படுகிறார்.

அவரை வெறுக்கிற சிலர் இவைகளை அறிந்திருப்பார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒரு இனந்தெரியாத வெறுப்பு-காரணங்களில்லாத வெறுப்பு-கால் கை முளைக்காத-ஊனமடைந்த-பழுதடைந்த-சதைக் கொழுப்பே இந்த வெறுப்பிற்குக் காரணம்.

நடிப்பை வெறுக்காதவர்கள்-குறிப்பிட்ட இந்த நடிகரை மாத்திரம் வெறுத்தனர்-அதிலும் கோடான கோடி மக்கள் இந்த மன்மத வீணையின் மனோ ராகங்களுக்குக் கட்டுப்பட்ட பிறகும் வெறுத்தனர்.

நீரிழிவுக்காரர்களுக்கு அல்வா மேல்தான் அருவெறுப்பு.

இவர்கள் நாடக வளர்ச்சி வரலாற்றையே புரட்டிப் பார்க்க விரும்பாதவர்கள்.

தொடக்கக் கால நாடகங்களில் ‘ஸ்திரி பார்ட்” என்றிருந்தது. பெண் பாத்திரத்தை-ஆடவரே ஏற்றிருந்த காலம்-நாடகத்தில்-பெண்கள் நடிப்பதற்கென்று கால் வைக்காத நேரம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *