POST: 2017-12-02T08:41:14+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-141
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
அவர்கள் இன்னமும் அம்புலிமாமா வயதிலேயே நின்று விட்டவர்கள் என்றுதான் அர்த்தம்.

எந்தத் தைலத்திலாவது கொட்டிப் போன முடிகூட முளைத்து விடலாம்; எந்த வைத்தியத்திலும் இவர்களின் மன நோய் தீராது.

நாடகத்தை ‘வெறுத்த’ காலத்தை விட நடிகரை வெறுக்கிற காலம் அந்த வெறுப்பாளர்களை ஆதி மனிதர்களாக மாத்திரமே அடையாளங் காட்டுகிறது.

விரும்பாமலிருத்தல் வேறு-வெறுத்தல் வேறு. அதுவும் ஆதாரம்-அடிப்படைகளில்லாது-ஒருவரை வெறுத்தல் என்பது விரும்பத்தக்கதே அல்ல. அது மனிதனை நியாண்டர்தால் மண்டை ஓட்டை அணிந்து கொண்ட மனிதமிருகமாகவே சித்தரிக்கும். வெறுப்பே கூட இயற்கையின் பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

உதாரணத்திற்கு-நான் கறுப்பாக இருக்கிறேன்- எனது பற்கள் வரிசையாக இல்லை -என்பதற்காக ஒருவர் என்னை வெறுத்தால் நான் குங்குமத்தை உடல் முழுவதுமாகக் கொட்டிக் கொள்ளலாமே தவிர-“கும்”மென்று சிவந்து விட இயலாது; வேறு பற்களை நிறுத்தி வைக்கலாமே தவிர- இருக்கிறவைகளைத் தட்டி வெளியிலே எறிந்திட இயலாது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *