டாக்டர் பிரியா இராமச்சந்திரன் எழுதிய
வாலி வதை – ஆதிகவியும் கம்ப கவியும்
புத்தக வெளியீட்டு விழா
=========================================
நாள் : 04.12.2017
நேரம் : மாலை 06.00 மணி
இடம் : மியூசிக் அகாடெமி, சென்னை.
நன்றியுரை : முனைவர் ந.அருள்
——————————
இனிமையான இந்த விழாவில் நிறைவான கட்டத்தை நாம் நெருங்கி விட்டோம். எழுதத் தொடங்கிய டாக்டர் பிரியாவின் கலைக்கரம் கம்பராமாயண வால்மீகக் கடல்களில் அளந்தபடி உள்ளது. டாக்டர் பிரியா அவர்களுக்கு மனங்கனிந்த பாராட்டுக்கள்.
டாக்டர் ரேலா உலகப் புகழ் பெற்ற மாற்றுறுப்புச் சோதனைகளில் மன்னாதி மன்னர். தனக்கே சொந்தமான கருத்துக்களை ஆரவாரமில்லாமல் எடுத்துரைத்தார். வாலி வதை என்றும் தீராத வழக்கு. ஆய்வாளர்களால் ஆயிரம் முறைகளுக்கு மேல் வாதிட்டு வாதிட்டு முடிவு காணாத வழக்கு.
ஜூலியஸ் சீசர் என்ற நாடகத்தில் ஒரு பகுதி வரும் !.
இந்தக் காட்சி இங்கு மட்டுமல்ல. இனி எங்கும் என்றும் உலகெங்கும், உலக மொழிகளில் நடத்தப்படுவதை நீங்கள் காண்பீர்கள்.
” How many ages hence shall this our lofty scene be acted over in states unborn and accents yet unknown ”
என்று ஷேக்ஸ்பியர் ஜூலியஸ் சீசர் நாடகத்தில் எழுதி இருப்பதைப் போலவே வாலி வதம் பற்றிய வழக்கு ஓய்வில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினராகவும், பாரதிய ஜனதா மூத்த தலைவராகவும், ஓயாத அரசியல் பணிகளுக்கு நடுவில், பொற்றாமரையில் இலக்கியத்தையும் வளர்த்து வருகிறார், அவர் தலைமை பெருமை தருவதாகும்.
அங்கிங்கெனாதபடி எங்கும் விளங்கும் இலங்கை ஜெயராஜ் அவர்கள் இலங்கை, தமிழ்நாடு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆகிய எட்டுத் திசைகளிலும் இலக்கிய முரசு கொட்டி வரும் அண்ணல் இலக்கியவாதி ஜெயராஜ் அவர்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி.
இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறும்.ஆண்டு தோறும் புதிய நூல் டாக்டர் பிரியாவால் வெளியிடப்பெறும்.
கம்பர் புகழ்மணம் என்றும் நின்று நிலவும் !.
பதிப்பித்த வானதி அண்ணன் இராமநாதன் அவர்கட்கும்,
நிகழ்ச்சியை நடுத்தநராக இணைந்த தேசியமணி புதுவை இராமசாமி அவர்கட்கும், நூலை வெளியிட்ட திரைப்பட தயாரிப்பாளர் அண்ணன் ஏ.வி.எம். சரவணன் அவர்களுக்கும், நூலை பெற்றுக் கொண்ட திரைப்பட இயக்குநர் அண்ணன் எஸ்.பி.முத்துராமன் அவர்களுக்கும், அழைப்பினை ஏற்றுத் திரண்டு வந்த அன்பர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கம் !.
வாழ்க தமிழ் !
ஓங்குக கம்பன் புகழ் !

Add a Comment