POST: 2017-12-07T10:56:45+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-144
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================

ஆயிரம் பேருக்கே சொல்லித் தருகிற நட்டுவனாவரைத் தெரிந்து கொள்ளுகிறவர்கள் எத்தனை பேர்?

சொல்லி வைக்கிற அவர் தனக்குக் கூட்டம் சேரவில்லை என்று கோபித்துக் கொண்டால் எப்படி?
அத்தனை பேருக்கும் சொல்லிக் கொடுத்தாலும் அவர் ஒரு பத்மினியாக பரதமாட இயலாதல்லவா?

கருத்தோட்டமுள்ள கட்டுரைக்காக எழுதியவன் பாராட்டுப் பெறுவானே தவிர – எழுத்தடுக்கி வைத்த கம்பாசிட்டர்களை உலகம் கவனத்தில் வைப்பதில்லை. அச்சடித்த இயந்திரத்தை ஊரார் வலம் வந்து வாழ்த்துவதில்லை.

குடல்வால் அவசியந்தான்; இதயத்திற்குத் தருகிற முக்கியத்துவம் தனக்குத் தரப்படவில்லை என்று அது கோபித்துக் கொண்டால் எப்படி?

நானே தான் ஆயிரங்கால் மண்டபத்தை அசையாமல் வைத்திருக்கிறேன் என்று அஸ்திவாரம் – மண்ணுக்கு வெளியில் – பல்லைக் காட்டிக் கொண்டிருந்தால் எப்படி?

புரட்சித்தலைவர் ஒரே நாளில் வெடித்து வெளிக் கிளம்பிவிட்ட கீரைச்செடி அல்ல!

மெல்ல மெல்ல – என்றாலும் இறுதியாக வேர் பரப்பி விழுது விட்டு-நிழல் தருகிற – நிம்மதி தருகிற-சூறைக்காற்றுக்கும்…. பூகம்பக் குலுக்கலுக்கும்…. ஈடு கொடுத்து – நிமிர்ந்து நிற்கிற ஆலமரம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *