POST: 2017-12-09T14:43:54+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்

========================================

பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

அவர்களின் சிறப்புரை

==================================

பகுதி-145

—————-

=================================================

புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை

=================================================

கதாநாயகர்களை – படம் பார்ப்போர் தங்கள் மனங்களில் வரித்துக் கொள்வதற்கு அடிப் படைக் காரணம் ஒன்றுண்டு.

மனவோட்டத்திற்கு – தட்டுப்பாடுகள் – தடங்கல்கள் இல்லை

அறைக்குள்ளிருந்து எழுதிக் கொண்டிருக்கிறபோது என்னை – என் கருத்தை – இயக்கிக் கொண்டிருக்கிற மனது சில நிமிட நேரங்களில் – உரோமாபுரிப் பட்டிணத்தின் அழிபாடுகளைத் தரிசித்து வரக் கிளம்பி விடுகிறது. இன்னமும் சற்று நேரத்தில் – சஹாராப் பாலைவனத்தில் – வரி வரியான மணல் வெளிகளில் கால் புதைந்து நடைபோடுகிறது.

அதற்கு அடிப்படைக் காரணம் மனம். இறுகவே கடிவாள மிடப்பட்டு – கட்டி வைக்கப் பட்டாலும் – கட்டுக்களைக்கிள்ளி எறிந்துவிட்டு -எங்கும் அது ஒடி – ஆடி – ஒய்யாரம் காட்டுகிறது.

திரைப்படத்தைப் பார்க்கிற போது-பார்க்கிற ஒருவனுக்கு அழகான பெண்களுடன் கொஞ்சிட வேண்டும் என்கிற எண்ணம்-பனிப் பாறைகளை போல மனதின் அடி ஆழத்திலே-பதிந்து உறைந்திருக்கலாம். இருந்தாலும் அது சாத்தியமில்லாத-கை கூடாத கனவாகக் கரைந்திருக்கலாம்..

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *