மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-146
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
எனது நேசத்துக்குரிய-நெஞ்சில் நிலைத்திருக்கிற கதாநாயகன்-கன்னியரோடு களித்தாடுகிறபோது – எனது மனம் – கதாநாயகன் மீது-தன்னைத்-தன் உடலை – உணர்வை – உள்ளக் குறிப்பை ஏற்றி வைத்து மகிழ்கின்றது
என் எண்ணத்தின் எழுச்சி ஊர்வலங்கள்- இதுவரைக்கும் அடைந்திட முடியாத ஆசை நதித்தீரங்களை-நான் திரைப்படம் பார்க்கிற அந்த மூன்று மணி நேரத்தில்-அடைந்து விடுகின்றன.
ஆகவே தான் நான் ஏறி நிற்கிற-ஒட்டி உறவாடுகிற-என்னில் ஒன்றாகி-நின்று நிலைத்து விட்ட அந்தக் கதாநாயகன் என் நெஞ்சிற்கினிய நேசராக இருக்கிறார்.
‘நான்’ என்று இங்கே ‘நான்’ எழுதுவது திரைப்படம் பார்ப்போருக்கெல்லாம் பொருந்தும்.
இப்படி இல்லை-என்று குரல் கொண்ட மட்டும் கூவி மறுக்கிறவர்கள்-உறங்கிக் கொண்டிருக்கிற அடிமனம் பற்றி இதுவரை நினைக்காதவர்கள் என்றே கொள்ள வேண்டும்.

Add a Comment