மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-147
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
புரட்சித் தலைவரைப் பொறுத்தவரை அவரது காதல் நிகழ்ச்சிகள்-ஆட்ட பாட்டங்கள் நிறைந்த படங்களிலே கூட-ஏழைக்கு இரங்குகிறவராக-அநியாயத்தைக் கண்டித்துச்-சீறி எழுகிற சின வேங்கையாக-நல்லொழுக்கத்திற்காக நாடே பாராட்டுகிற ஒரே உருவமாகத் திகழ்கிறார்.
எத்தனேயோ படங்களைப்பார்த்திருந்தும், அவர் கிளர்த்தெழுந்து நிமிர்ந்து நிற்கிற நாடோடி மன்னன் படம்-மாடிப்படிகளில் இறங்கி வருகிறபோது நளினத்தோடும்-அதே நேரம் -அநியாயத்தை எதிர்த்துச் சீறி நிற்கிறவராகவும் காணப்படுகிற எங்கள் வீட்டுப் பிள்ளை இப்படித் தோற்றங்களிலேதான் என் நெஞ்சில் அவர் நிலைத்தார்.
புரட்சித் தலைவர்-என்று நான் அவரை நினைக் கிறபோது மாட்டுக்கார வேலன் உருவம் எனக்குப் பிடித்த ஒன்றாக இருந்தாலும் கிளர்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற எனது மனதில் அவர் ‘நாடோடி மன்னனில்’ தாடியோடும், தடியோடும், ஒரு புரட்சிக்காரனைப் போல் நிற்கிற பொன்னான உருவமே வந்து வந்து போகிறது! ‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் ஒரு பக்கம் பார்க்கிறா’ என்கிற பாட்டில் அவரது நளினம் இன்னமும் எனது மனதில் கோலம்போட்டுக் கொண்டிருக்கிறது.
இதிலேதான் அவரது வெற்றியின் வித்து விழுந்து கிடக்கிறது.

Add a Comment