POST: 2017-12-14T10:40:46+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-149
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================

படம் பார்க்கிறபோது பத்துப் பேரை ஒரே மூச்சில்-ஒரே தட்டில்-வீழ்த்திக் காட்டுவது அந்தக் கதாநாயகன் அல்ல-படம் பார்க்கிற நாம். இதுவே அந்தக் கதாநாயகனுக்கு ஏற்படுகிற வெற்றி.

இது மாயை தானே – உண்மையில்லையே இதற்கு எப்படி ஆள் சேரலாம்-கூட்டம் வரலாம்-அரசியல் செல்வாக்கு உருவாகலாம் என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இவர்களுக்கு இந்த கட்டுரையிலே மாத்திரம் பதில் சொல்லி விடுவது சாத்தியம் என்று நான் கருதவில்லை.

புரட்சித்தலைவரின் படங்களைப் பொறுத்தவரை இருக்கிற சிறப்பெல்லாம் அவர் படங்களில் நடிக்கவில்லை வாழ்கிறார் என்பதுதான்.
இதை விரித்துப் பொருளுரைக்க வேண்டும் என்றால்-அவரது வாழ்விற்கும்-நடிப்பிற்கும் இடைவெளி இல்லை.

சமூக நியாயங்களுக்காக அவர் வாழ்விலே போராடாமல், திரைப்படத்தில் மாத்திரம் குரல் கொடுத்திருந்தால்-அவருக்கு இத்தனை செல்வாக்கு சேர்ந்திருக்காது.

அது மாதிரி “பெரிய இடத்துப் பெண்ணில் குடுமிக்காரராக வருகிற அவரது குடு குடுப்பைத்தனம் இன்னமும் கலகலப்பாகவே நெஞ்சில் குதி போட்டுக்கொண்டிருக்கிறது.

அதே போலத்தான் “எங்கள் தங்கம்’ படத்தில் அவர் கச்சேரி பண்ணுகிற களிப்பும் இன்னமும் கூட என் நினைவில் நிழலாடிக் கொண்டிருக்கிறது.

இப்படியே ஒவ்வொரு படம் பார்க்கிறவருக்கும் ஒரு வடிவம் மனதில் நிலைத்திருக்கலாம்.

ஏறத்தாழ 47 ஆண்டுக்காலம் தமிழ்த் திரைப்படத்தில் ஆட்சி புரிந்திருக்கிற புரட்சித் தலைவரின் சாதனை மகத்தானது.

உலகில் இத்தனை ஆண்டுக் காலம் நடிப்புத் தொழிலில் ஈடுபட்டவர்கள் இருக்கலாம். இறுதிவரை இங்கிதமான புகழோடு வாழ்ந்தவர் புரட்சித்தலைவர் மாத்திரமே!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *