மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-151
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================
அக்கிரமங்களை எதிர்க்கிறவராக-அநியாயங்களைச் சாடுகிறவராக-நியாயத்திற்காக குரல் கொடுக்கிறவராக-நீதியை நிலைநாட்டியே திருகிறவராக அவர் நடித்த மலைக்கள்ளன் ‘மதுரைவீரன்’ ‘குலேபகாவலி’ ‘அலிபாபா’ ‘தாய்க்குப் பின் தாரம்’ ஆகிய படங்கள் மக்களின் மகத்தான வரவேற்பை அப்போதே பெற்றன.
மக்களின் தேவை ஒரு மாவீரன்-ஆங்கிலத்தில் பாடப்படுகிற (G) காலஹெட் போன்ற பெண் களின் மானத்தைக் காக்கிற ஒரு மாவீரன் என்பதை அவர் தெரிந்து கொண்டார்.
ஏழைக்கு இரங்குகிறவராக- அவர்கள் கண்ணீரைத் துடைக்கிறவராக-கவலைகளை மாற்றுகிறவராக – வாழ்விலே நடை போடாவிட்டால் – திரைப்படத்தில் மாத்திரம் அந்த நடிப்பு எடுபட்டிருக்காது.
‘உண்மை’ இல்லாவிட்டால் ஒராயிரம் சரிகை வேலைகள் எடுபடாது என்று நான் அடிக்கடிச் சொல்லுவது இதைத்தான்.
வாழ்க்கைக்கும், நடிப்பிற்கும் இடைவெளி இல்லாத ஒரு தலைவர்-“சினிமா மாயையில் நிற்கிறார்” என்று சொல்லுவது சிறு பிள்ளைத்தனம்.

Add a Comment