POST: 2018-01-18T05:51:57+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-152
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================

பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகரில்லையா?-பிறர்
தேவை அறிந்துகொண்டு வாரிக் கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா?”
என்கிற பாடலை கிள்ளிக்கூடத் தராதவர் பாடுவது கிண்டலுக்குத்தான் இடமாகும். ஆனால் அள்ளித்தந்த அற்புதத் தலைவர் பாடுவதால், அது நெஞ்சில் நிலைக்கின்ற செஞ்சொல் சித்திரமாகி விடுகிறது.

புகைப்பிடிக்காதவராக – குடிக்காதவராக நடிக்கிறார். இந்த உருவம் (Image) மக்கள் மனதில் பதிந்து விட்டது – அதுவே வெற்றிக்கு ஆதாரம் என்று பேசுகிறார்கள்.

உங்களின் நேசிப்பிற்குரிய – நினைவில் பதிந்திருக்கிற – “நான்” புகை பிடிக்கவில்லை – குடிக்கவில்லை – என் வாழ்விலும் நான் இவைகளைத் தொடுவதில்லை – வாழ்விற்கும் நடிப்பிற்கும் இடைவெளி இல்லை – என்று படம் பார்க் கிற இலட்சக்கணக்கானவர்கள் திருந்திட அவர் வழி சொல்வது எப்படித் தவறாகும்?
மதாச்சாரியார்களும், முனிபுங்கவர்களும் காட்டிலே கடும் தவம் இயற்றி – நாடு நகரத்திற்கு வந்து மக்களுக்குச் சொன்ன வாழும் உண்மைகளை – திரைப்படத்தில் -நிஜ வாழ்க்கையில் – வாழ்ந்து காட்டி அழுத்தமான முத்திரையோடு – சொல்லிக் காட்டுவதும் – நெஞ்சிலே ஏற்றுவதும் குற்றமா?

பல வேதப் புத்தகங்கள் செய்திருக்காத வேலையை – அவரது திரைப்படங்கள் செய்திருக்கிறது என்றே வாதாடுவேன்!

ஜேம்ஸ் பாண்டாக நடித்த சீன் கானரி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டதற்காக அவரது ரசிகர்கள் திரண்டெழவில்லை.

இதற்குக் காரணம் அந்த ரசிகர்களின் அறிவாளித்தனம் அல்ல. சீன் கானரி என்கிற அந்த நடிகரின் நடிப்பிற்கும்-வாழ்க்கைக்கும் இருந்த இடைவெளிதான்

ராஜேஷ் கன்னா அரசியலில் நுழைந்து தேர்தலில் நின்றால் வெற்றி பெறுவாரா-என்கிற கேள்விக்கு “மதர் இந்தியா பத்திரிகை ஆசிரியர் பாபுராவ் பட்டேல், “அவர் எம். ஜி. ஆர். அல்ல -என்றே பதிலெழுதி வைத்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *