POST: 2018-01-19T13:55:38+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-153
—————-
=================================================
புரட்சித்தலைவரைப் பற்றி வலம்புரிஜான் அவர்களின் புகழுரை
=================================================

சினிமா ஒன்றே அவருக்குச் செல்வாக்கு சேர்த்தது என்பது உண்மை என்றால் அவர் நடிக்காத நாளிலும் அவருக்குக் கூட்டம் சேருகிறதே-அது எப்படி? அது எதற்காக?
பழைய படம் பார்த்திடக் கூட்டம் சேருகிறது என்கிறார்களா-அவர்கள் இருளின் புத்திரர் அவருக்குச் சேர்ந்த செல்வாக்கிற்குச் சினிமா ஒரு காரணம் -சினிமாவே – சினிமாவே காரணமல்ல.

பொழுது போக்கிற்கான ஒரு சாதனத்தை, சமுதாயத்தை மாற்றுகிற புரட்சிகரமான கருவியாக முற்றிலும் மாற்றி வைத்தபெருமை அவருக்கே உண்டு.

‘உலகத் தொழிலாளர்களே! ஒன்றுபடுங்கள்; நீங்கள் இழக்க வேண்டியது சங்கிலிகளைத் தவிர வேறு ஒன்றும் இல்லை” என்று காரல்மார்க்சும் பிரெடரிக் ஏங்கல்சும் சொல்லி வைத்திருக்கலாம்.

இருந்தாலும் “காடு விளைஞ்சென்ன மச்சான் நமக்குக் கையும் காலும் தானே மிச்சம்’ என்கிற பட்டுக்கோட்டை பாடலுக்குப் புரட்சித் தலைவர் வாயசைத்த பிறகுதான் அந்தப் பிரகடனத்திற்கே வரலாறு தொடங்குகிறது.

‘நானே போடப் போறேன் சட்டம்-அது நன்மை புரிந்திடும் திட்டம்” என்று அன்று அவர் சொன்னதன் அர்த்தம் இன்று தான் தெரிகிறது. அவர் வாழ்ந்த படங்கள் இன்று வரலாற்றின் தடங்கள். நாளே இன்பமான எதிர்காலம் தங்கும் இடங்கள்!

அவர் தொட்டது துலங்குகிறது; துலங்குவது தொடருகிறது. இந்தப் பொன்விழா ஆண்டில் சிறந்த திரைப்படக் கலைஞர் ஒருவரே நாட்டை நடத்தும் நல்லோராக இருப்பது பெருமை தரத்தக்கது!

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *