POST: 2018-01-21T08:33:52+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-155
—————-

இசைச்சித்தர்
சிதம்பரம் ஜெயராமன்
============================

நெஞ்சு பொறுக்குதில்லையே இங்கே விலக்கி வைத்திருக்கிறார்கள். யாழின் நரம்பொலியை எந்தத் தொடர்களையெல்லாம் இனியொருவர் பிறந்து இசைச்சித்தரைப் போல இசைக்கப்போவதில்லை.

இசைச்சித்தர் பதவி ஏற்பதற்காகச் செயலர் அறைக்கு வந்தார். நான் மாலையில் வரவேற்றேன். என்னுடைய துறையைச் சார்ந்தவர்களும் வெவ்வேறு துறையில் பணியாற்றியவர்களும் சிதம்பரம் இசைக்கடலைக் காண்பதற்காக நிரம்பி வழிந்தார்கள்.

குரல்தான் இடிக்குரலாக இருந்தாலும் அவர் உடல் சிறிது மெலிந்த நிலையிலும், தளர்ந்த அமைதியிலும் இருந்தது. அரை மணி நேரம் தமது இசை வாழ்வைப் பற்றி பேசியதோடு தமக்கு இந்தப் பதவியை வழங்கிய புரட்சித்தலைவருக்குக் கர்நாடக இசைத் திறமையுண்டு, அவர் ஒருமுறை அரசிளங்குமரி படத்தில் ஒரு பித்தனைப்போல நடித்தபோது, காலைத் தூக்கி நின்றாடும் என்ற பதத்தைப் பாட வேண்டும் என்று சொல்லி, அதற்கு அவர் அபிநயம் பிடித்தது எவராலும் மறக்க முடியாது என்று மனம் நெகிழச் சொன்னார்கள்.

இயலிசை இலக்கணம் நன்கு தேர்ந்து தெளிந்த இசைச்சித்தர் அவர்கள், பள்ளிச் சிறுவனாக இருந்த காலத்திலேயே இசை இமயம் பாடகலிங்கப் பிள்ளை அவர்களின் கச்சேரிகளில் அவர் மடியில் கிடந்துகொண்டு அவர் பாடும்போது இராகத்தையும் சரளி வரிசையையும் சொன்ன சிங்கக்குட்டிதான் சிதம்பரம் ஜெயராமன் என்று இசை சொற்பொழிவில் சிகரமாகத் திகழ்ந்த எம்பார் விஜயராகவாச்சாரியார் இசைச்சித்தரின் பாராட்டு விழாவில் பேசியது, இன்றும் என் கண்முன் நிற்கிறது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *