மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-158
—————-
புரட்சித்தலைவரை முதன்முதலாக பார்த்த போது.
==============================================
அது 1957ஆம் ஆண்டு நான் பச்சையப்பன் கல்லூரியில் நான்காம் ஆண்டு ஆனர்சு படித்துக் கொண்டிருந்தேன். அக்கல்லூரியின் மாணவர் மன்றத்திற்கு நான் அப்போது தலைவராக இருந்தேன். அந்த ஆண்டு முழுவதுமே ஒரே கல கலப்புத்தான்; கலை நிகழ்ச்சி தான் ! அப்பொழுதெல்லாம் திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள் வீடுதான் எனக்குத் தாய்விடு”.
அவர்கள் என்னிடம் மிகுந்த பரிவோடு அன்பு காட்டுவார்கள், ஞாயிறு விடுமுறை நாட்களில் நான் அங்கேதான் இருப்பேன். அந்தத் தாய்மை, அன்பு, பரிவு ஆகியவை இன்றுவரை எள்ளளவும் குறைந்ததில்லை!
எங்கள் கல்லூரியில் வரலாற்றுப் பிரிவு ஆனர்சு படித்துக் கொண்டிருந்த குணசேகரன் என்ற மாணவரின் தந்தை ‘திடீரென்று இறந்து விட்டதால், அவர் தன்னுடைய படிப்பைத் தொடர முடியாமல் மிகவும் துயரப்பட்டார்; கடன் சுமை வேறு அவர் கழுத்தை நெருக்கியது. அவருடைய அவல நிலைமையை ஒரு நாள் மாலையில் திருமதி செளந்தரா கைலாசம் அம்மையாரிடத்தில் நான் சொன்னேன், “அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் அம்மா” என்று அவர்களிடம் முறையிட்டுக் கொண்டேன், “ஐயோ பாவம். அவரை எப்படியாவது படிக்க வைத்துவிடலாம். கவலை வேண்டாம், நமது ‘எம்.ஜி.ஆர். இருக்கிறார்” என்று சொன்னார்கள்.
சொன்னால் யாருமே நம்ப முடியாதது போல ஓர் அற்புதமான நிகழ்ச்சி அங்கே நடந்தது.
அம்மா அவர்கள் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது, அங்கே பிளைமவுத் கார் ஒன்று அசைந்து வந்து நின்றது. காரிலிருந்து ஒரு பொற்சிலை இறங்கியது. ஆயிரம் மின்னல்கள் அடிப்பதைப் போல் திடீரென்று புரட்சித் தலைவர் அந்த அறைக்குள்ளே நுழைந்தார். என் உடம்பெல்லாம் கண்ணாயிற்று;

Add a Comment