மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-161
—————-
புரட்சித்தலைவரை முதன்முதலாக பார்த்த போது.
==============================================
சரியாக அரைமணி நேரம் ஆனதும், ஐந்து மணிக்கு அவர் கையில் கட்டியிருந்த ‘பொன் கடியாரத்திலிருந்து அலாரம் ஓசை கேட்டது. அங்கிருந்த அத்தனை பேருமே தங்கள் வாழ்க்கையில் முதன் முதலில் கைக்கடிகாரத்திலிருந்து அலாரம் ஒலியைக் கேட்டது அப்போதுதான். ஒரே வியப்பு. பெரிய கையொலி.
இன்னும் கொஞ்ச நேரம் பேச வேண்டுமென மாணவர்கள் கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் விருப்பத்தினை ஏற்று, மேலும் ஒரு அரை மணி நேரம் பேசினார். பேசி முடித்ததும், மாணவர்கள் எல்லோரும் அவரை சூழ்ந்து கொண்டார்கள். ஆயிரம் மாணவர்களுக்காவது ஆட்டோகிராப் கையெழுத்திட்டுத் தந்தார். எஞ்சியவையை வாங்கிக் கொண்டு தம்பி நடராசனிடம் கொடுத்து விடுகிறேன் என்றார்.
அண்ணன் மதுரை முத்துவும் உடன் வந்திருந்தார். புரட்சி தலைவரோடு கூட நானும் காரில் சென்று விட்டதால் என் மாணவர்களுக்கு ஏக மகிழ்ச்சி காரில் போய்க் கொண்டிருந்த போதும் என்னைப் பார்த்து “சாப்பிட்டாயா. உடம்பை நன்றாகப் பார்த்துக் கொள்! நாள்தோறும் உடற்பயிற்சி செய்வதில்லையா?” என்றெல்லாம் என் தோளைத் தட்டி கேட்டார்.
இதோ இப்போது தோல் வலியால் மருத்துவமனையை நோக்கி நான் நடந்து கொண்டிருக்கிறேன். 1957ல் எப்படி இருக்கிறாய் சாப்பிட்டாயா, உடற் பயிற்சி செய்வதில்லை என்று கேட்ட அவர் தாய்மைப் பரிவு, அன்பு நேற்றுப் பார்த்த போதும் குறையவில்லை நெடுந்தொலைவு சென்ற நான் சைவ உணவிற்காக தவித்தபோது யாரோ ஒருவர், முதலமைச்சர் உங்களை விசாரித்தார் என்று சொல்ல நெஞ்சம் மேலும் நெகிழ்ந்தது.

Add a Comment