POST: 2018-01-29T10:46:44+05:30

இசை உலகத்தின் தனிப்பெரும் சிகரமாக புகழொடு திகழும் நண்பர் இளையராஜா அவர்கள் பத்ம விபூசன் விருது பெறுவதை அறிந்து வாழ்த்துவது தமிழ் மக்களின் மாறாத கடமையாகும்.

தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் நான் துணை வேந்தராக இருந்தபோது என்னோடு விருந்துண்ண இளையராஜா வந்ததை நினைத்து மகிழ்கிறேன்.

மாணவர்களும் பேராசிரியர்களும் சுற்றிச் சூழ அவர் மகிழ்ந்து தன் கருத்துகளை கூறியதை எவரேனும் பதிவு செய்திருந்தால் பெருமிதமாக இருந்திருக்கும்.

இசைப் பெருமிதம் பெருகியிருந்தாலும் தோழர்களோடு தோள் தொட்டு பேசும் அவர் தொடர்பை எண்ணிப் பாராட்டுகிறேன்.

விழுமிய பெறலரும் பரிசில் பெற்ற இசை வேந்தர் புகழ் என்றும் வாழ்க.!

—– பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *