மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-170
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி:
————-
சத்யபாமாவின் கணவர் கோபாலன் நீதிபதியாக இருந்தபோது, காவல்துறையில் பணிபுரிந்தவர் வேலுநாயர். அவர் ரிடையராகி, பார்க்க வருகிறார். சக்ரபாணி தாயிடம் அவர் வந்திருப்பதைக் கூறுகிறார். சத்யா வரவேற்கிறார்.
வேலுநாயர்:
———————-
அம்மா…. நீங்க பட்ட கஷ்டமெல்லாம் கேள்விப்பட்டேன். எப்படி இருந்தவங்க….. அதெல்லாம் எதுக்கும்மா, நீங்க ரெண்டு பேரும் நல்லதையே நினைச்சு நல்லதையே செய்தவுங்க. உங்களுக்குக் கடவுள் ஒரு குறையும் வைக்க மாட்டான். நம்ப உறவுக்காரவுங்க மத்தியிலே கஷ்டப்படத்தயாரா இருந்தாலும் சரியான மரியாதை இல்லேன்னா சங்கடமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்காக வாழணும்னு நினைக்குறீங்க. நான் ரிடையராகிட்டேன். பிழைப்பைத் தேடிக் கும்பகோணம் போறேன். நமக்குன்னு உள்ள உறவுங்க விலகிப்போனாலும், ஈரமுள்ள மத்தவுங்க உதவி செய்வாங்க. தமிழ்நாடு நம்மை வாழவைக்கும். பிள்ளைங்களை உருவாக்க நானும் உங்களுக்கு உதவியா இருப்பேன்.
சத்யபாமா:
———————
நீங்க சொல்றது சரிதான். வளமாக வாழ்ந்த இடத்திலே வறுமையிலே வாடுறதை விட, நம்மைப்பத்தி தெரியாதவுங்க மத்தியிலே எப்படிப்பட்ட கஷ்டத்தையும் பொருட்படுத்தாம உழைச்சு, கால் வயித்துக் கஞ்சி குடிச்சாலும் மனசுக்கு நிம்மதிதான்.
வேலுநாயர்:
———————-
நீங்க… பிள்ளைகளை அழைச்சுக்கிட்டுத் தயாராகுங்க… கும்பகோணம் புறப்படலாம். நம்பிக்கையோட வாங்க… அந்தத் தெய்வம் நல்வழிக்காட்டும்.
சத்யபாமா:
———————
சரிங்க…! மனுஷங்க கைவிட்டாலும், தெய்வம் காப்பாத்தும்ங்கிற நம்பிக்கையிலேயேதான் என்னைப் போல ரொம்பப் பேரு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க….
காட்சி மாற்றம் :
=================
குடும்பத்தினர் அமர்ந்துள்ளனர்: ஆண்குரல்: பாலக்காட்டிலிருந்து சத்யபாமா தனது பிள்ளைகளுடன், வேலுநாயரோடு கும்பகோணம் வந்து சேர்ந்தார். வேலுநாயர் மிகவும் நம்பிக்கையுடன் உறவுக்காரர் இல்லத்திற்குச் சென்றார். அவர்கள் சரியானபடி உபசரிக்காததால் அவருக்குக் கோபம் வந்து விடுகிறது. அவரது உறவினர் நாராயணன் நாயர் மட்டும் ஆதரவாக இருக்கிறார். குறைந்த வாடகையில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துச் சத்யபாமா அம்மையாரையும் குழந்தைகளையும் அங்குத் தங்க வைக்கிறார்.
சத்யத்தாய் பணிபுரிகிறார். வயோதிகரான வேலுநாயரும் வேலைபார்த்து முடிந்த அளவு உதவி செய்கிறார். கஷ்டங்களுக்கிடையில் குடும்பம் நடக்கிறது. எம்.ஜி.ஆர் தவழ்ந்து, நடந்து வளர்கிறார். தனது பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைக்க வேண்டுமென்று தாய் சத்யபாமா விரும்புகிறார்.
கும்பகோணத்தில் ஆனையடி பள்ளியில் எம்.ஜி.சக்கரபாணியையும், எம்.ஜி.ஆரையும் சேர்க்கிறார்.

Add a Comment