POST: 2018-02-18T10:21:10+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-171
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி :
————–

காலை நேரம்,
சின்னஞ்சிறிய வீடு.

வாசலில் சாணம் தெளித்துக் கோலம் போடுகிறார் சத்யபாமா. பின்பு வீட்டிற்குள் வருகிறார்.

சிறுவர்களான…..
சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் பாயைச் சுருட்டி வைக்கின்றனர்.

சக்ரபாணி வீட்டின் கொல்லைப் புறத்தில் சாம்பல் எடுத்துப் பல் துலக்குகிறார்.சிறுவன் எம்.ஜி.ஆருக்குத் தாய் சத்யபாமா பல் துலக்கி விடுகிறார்; குளிப்பாட்டுகிறார்.

சத்யபாமா:
———————-

(செல்லமாக)உன் வயசுப்பிள்ளைங்க தானா பல் துலக்கி, குளிச்சு முழுகிட்டும் பள்ளிக்கூடம் போகுது!கால கண்டா நீ மட்டும் ஏன்டா இப்படி அடம் பிடிக்கிறே!

எம்.ஜி.ஆர்:
——————–

(சிணுங்கியபடி) அம்மா… உன் கை பட்டாத்தாம்மா பல்லு பளிச்சுன்னு இருக்குது.உடம்பு தங்கம் மாதிரி தகத் தகன்னு ஜொலிக்குது!ஏம்மா…. எங்கம்மா கை என் மேலே பட்டுக்கிட்டே இருக்கணும்-நீ எப்போதும் என்னோடவே இருக்கணும்னு நான் நினைக்கிறது தப்பாம்மா…?

சத்யபாமா :
———————-

( கண்கலங்கியபடி)நான் எப்பவும் உன் பக்கத்திலேயே தான் இருப்பேன்.
குஷியோடு குளித்துவிட்டுச்
செல்கின்ற எம்.ஜி.ஆர்.
கொல்லைக் கொடியில்
தன் கோவணத்தைக்
காணாமல் குதிக்கிறார்.

எம்.ஜி.ஆர்:
——————–

அம்மா…என் கோவணத் துணியை அண்ணன் எடுத்துட்டுது.

சத்யபாமா:
———————-

என்ன..சொன்னே..?

எம்.ஜி.ஆர்:
——————–
என் கோவணத் துணையையும் துண்டையும் அண்ணன் எடுத்துட்டுதும்மா…

சத்யபாமா:
———————

(கோவமாக)சின்னப்பிள்ளை நீ…! இப்பவே என்னுது…உன்னுதுன்னு பிரிச்சுப் பேச ஆரம்பிச்சுட்டியா…? அவன் மட்டும் யாரு….உன்னோட அண்ணன் தானே!இனிமே ‘என்னோடது என்கிற வார்த்தையே வரக்கூடாது!என்ன…இந்த மாதிரி சொல்லுவியா?
ஆத்திரத்தோடு மகன் எம்.ஜி.ஆர் முதுகில் தாய் சத்யா ஒரு அடி கொடுக்கிறார். எம்.ஜி.ஆர் அழுகிறார். அவர் கண்ணீரோடு ‘என்’ என்கிற தன்னலமும் கரைந்து, மறைந்து போகிறது.
சக்ரபாணி:அம்மாவோட கை எப்போதும் உன் மேலேயே பட்டுக்கிட்டு இருக்கணுமுன்னு சொன்னீயில்ல….அதான்…! போதுமா..?
சக்ரபாணி சிரிக்கிறார்.

தாய்சத்யபாமாவும் அழும் எம்.ஜி.ஆரும் தங்களை மறந்து சிரிக்கின்றனர்!

காட்சி :
————–

எம்.ஜி.ஆருக்கு அடர்த்தியான நீண்ட முடி, தலைவாரிப்பின்னி விடுகிறார் தாய். பின்னர், பூச்சூட்டி, பொட்டு வைத்து, திருஷ்டிப்பொட்டு வைக்கிறார். சக்ரபாணி பின்னல் போட்டு, பூ வைத்துப் பொட்டு வைத்து நிற்கிறார். பின்னர்த் தட்டில் சோறு போட்டுக் கொண்டு அவரே சாப்பிடுகிறார். எம்.ஜி.ஆருக்கு மட்டும் அவருடைய தாயே சோறு ஊட்டி விடுகிறார்.

காட்சி :
————–

பிள்ளைகள் இருபுறமும் வர, சத்யபாமா அவர்களைப் பள்ளிக்கு அழைத்துச்செல்வது காண்பிக்கப்படுதல்

காட்சி :
————–

பள்ளியில் மூன்றாவது வகுப்பில் ஆசிரியர் ‘எம்.ஜி.ராமச்சந்திரன்’ என்று அழைக்க…..”உள்ளேன்…அய்யா…” என்று எம்.ஜி.ஆர்.கூறுவது

காட்சி :
————–

சடுகுடு, பச்சைக்குதிரை, கிட்டிப்புள், கோலி விளையாட்டு அனைத்திலும் எம்.ஜி.ஆர். வெற்றி பெறுவதைத் தனித்தனியே காண்பித்தல்.

காட்சி :
————–

பள்ளிக்கூடம்
மாலைநேரம்
பள்ளிக்கூடத்தின் வாசலில் பள்ளியில் படிக்கும் சிறுவனின் புத்தகப்பையை இன்னொரு மாணவன் பறித்துக் கொண்டு செல்கிறான். பறி கொடுத்த அப்பாவி அழுகிறான். சிறுவன் எம்.ஜி.ஆர் பாய்ந்து ஓடிச் சென்று துரத்திப் பிடித்து அவனைப்பிடித்து விடுகிறான். அவனது கையிலிருந்த பையை வாங்கி வந்து, பறி கொடுத்த பையன் கையில் கொடுத்து அவன் கண்ணீரைத் துடைத்துச் சமாதானப்படுத்துகிறார். அழுதவன் சிரிக்கிறான்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *