POST: 2018-02-20T10:09:23+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-172
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி :
————

பள்ளிக்கூடம்
காலை நேரம்
———————-

மூன்றாவது வகுப்பில் தண்ணீர்ப்பானை வைப்பதற்கு ஒவ்வொரு மாணவனிடமும் வகுப்புத் தலைவன், காலணா வீதம் வசூல் செய்கிறான். காலணா கொடுக்காத ஒரு தாழ்த்தப்பட்ட மாணவனை, வகுப்புத் தலைவன் அடிக்கிறான். எம்.ஜி.ஆர்., இந்த மாணவனைக் காப்பாற்றி, வகுப்புத் தலைவனுடன் சண்டை போடுகின்றார். இந்தச் சமயத்தில் வகுப்பு ஆசிரியர் வந்துவிடுகின்றார். மாணவர்த் தலைவன் வசூல் செய்த பணத்தில் எதிரில் கடையில் உருண்டை வாங்கித் தின்றதாகக் கூறி அந்தக் கூற்றை எம்.ஜி.ஆர். நிரூபிக்கிறார். உடனே, தர இயலாத ஏழை மாணவனை அடித்ததை, தான் தடுத்துச் சண்டையிட்டதைத் தெரிவிக்கிறார். வகுப்பு மாணவர்கள் அவருடைய பக்கம் நிற்கின்றனர். ஆசிரியர் அந்த வகுப்புக்கு எம்.ஜி.ஆரைத் தலைவராக்குகிறார்.

காட்சி :
————

காலை நேரம்

தாய் சத்யா அடுத்த வீட்டு
வாசலில் நிற்கிறார். அந்த
வீட்டுப் பெண்மணி ஒரு முறத்தில்
அரிசி நொய் கொண்டு வந்து
போடுகிறார். சத்ய பாமா அதனை
முந்தானையில் வாங்கிக் கொள்கிறார்.
அப்படியே மடித்து, முந்தானையை
இடுப்பில் சொருகிக் கொண்டு
வீட்டிற்குள் வருகின்றார்.
22. இதனை எதிர்பாராதவிதமாக
எம்.ஜி.ஆர்.கவனித்துக் கொண்டு,
நிற்கிறார் கண்கலங்கியபடி.

காட்சி :
————

மதியம்(வேளை)

அன்னை சத்யா அடுத்த வீட்டிலிருந்து
வாங்கி வந்த நொய் அரிசியில்
கஞ்சி காய்ச்சுகிறார். இருதம்ளர்களில்
கஞ்சி ஊற்றிப் பிள்ளைகளிடம்
கொடுத்து விடுகிறார். தான் குடித்து
விட்டதாகத் தெரிவித்து, தண்ணீரை
அருந்துகிறார்.

எம்.ஜி.ஆர்.இதனையும் கவனித்து
விடுகின்றார். தாய் சத்யா சர்வசாதாரணமாகப்
பிள்ளைகளிடம் வருகிறார்.
சத்யா: ராமு…சக்கு…வயிறு நிறைஞ்சுதா?
எம்.ஜி.ஆர்: எங்க வயிறு நிறைஞ்சுட்டுதும்மா.

ஆனா…நாங்கக் குடியிருந்த வயிறு காயுதே.
எம்.ஜி.ஆர் கண்கலங்கியபடி கையிலிருந்த தம்ளரை
நீட்டுகிறார். அதில் பாதி கஞ்சி இருக்கிறது.
கஞ்சி உள்ள தம்ளரைத் தாயின் வாயில் வைத்து
குடிக்கும்படி வற்புறுத்துகிறார்.

சத்யா:
———–

பெத்த வயிறு மட்டுமில்லே, என்னைப்
போல எத்தனையோ தாய்களுடைய……
மத்தவுங்களுடைய வயிறும், மனமும்
உன்னாலே குளிரும். கஞ்சியைக் குடித்தபடி
பிள்ளைகள் இருவரையும் வாரியணைத்துக் கொண்டு கண்ணீர் விடுகின்றார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *