மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-175
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————–
தாய் சத்யா வற்புறுத்தலின் காரணமாகச் சதானந்தவதியை மணக்கிறார், எம்.ஜி.ஆர். பெண் பார்க்கச் செல்லவில்லை.தாயே பார்த்து முடித்த திருமணம். சதானந்தவதி கருத்தரித்தார். காசநோய் பற்றிக் கொள்கிறது. சிகிச்சையின் பலனாகக் கருச்சிதைகிறது. இருமுறை (1950) இவ்வாறு நேரிடுகின்றது.அவர் படுத்த படுக்கையாக இருந்து 1962 இல் காலமானார்.இதற்கிடையில் ‘மருதநாட்டு இளவரசி’ படத்தில் நடிக்கும் போது, படத்தின் நாயகி,வி.என்.ஜானகி மீது எம்.ஜி.ஆருக்குக் காதல் அரும்புகிறது. இருமனமும் ஒரு மனமாகி, டைரக்டர் கே.சுப்ரமணியம் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
காட்சி :
————–
எம்.ஜி.ஆர்.கதராடை அணிந்து, கழுத்தில் மணிமாலை அணிந்திருப்பார். நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட காந்தி, சுபாஷ் சந்திரப் போஸ் ஆகியோர் மீது ஆழ்ந்த பற்று கொண்டிருந்தார். போஸ் காங்கிரசிலிருந்து பிரிந்து விட்டார் என்றதும் மனம் வருந்தினார்.
காட்சி :
————–
பேரறிஞர் அண்ணாவை 1952 ஆம் ஆண்டு டி.வி.நாராயணசாமியுடன் சென்று சந்தித்தார்.’சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகத்தில் சிவாஜி வேடத்தில் நடிக்கும்படி அண்ணா கூறினார்.எம்.ஜி.ஆர்.ஏற்றுக் கொண்டார்.திரைப்படங்களில் ஓய்வின்றி நடித்ததினால் நாடகத்தில் நடிக்க முடியாமல் போயிற்று.
காட்சி :
————–
அண்ணாவின் எழுத்தும், பேச்சும் எம்.ஜி.ஆரை அரசியலைக் கூர்ந்து நோக்க வைத்தன.’பணத்தோட்டம்’ போன்ற நூல்கள் பலவற்றைப் படித்தார். அவருடைய பண்பும், அரசியல் நோக்கும் எம்.ஜி.ஆரையும் அண்ணாவின் இயக்கத்தில் இணைத்தன.(1953) கலைவாணர் என்.எஸ்.கே. இயக்க ஆதரவாளராக இருந்தார். கே.ஆர்.ஆர்நடிப்பிசைப்புலவர் என்று போற்றப்பட்டார்.
காட்சி :
————–
‘மர்மயோகி’ படம் 1951 வெளிவந்தது.
கரிகாலன் வேடத்தில் எம்.ஜி.ஆர். நடிப்பும்,
சண்டைக்காட்சிகளும் பாராட்டப்பட்டன.
பெரும் புகழ் சேர்ந்தது.
சர்வாதிகாரி, அந்தமான் கைதி,
என் தங்கை, குமாரி, நாம்
ஆகிய படங்கள் வெளிவந்தன.

Add a Comment