POST: 2018-03-03T11:53:07+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-177
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி :
————–

’தாய் மகளுக்குக்கட்டிய தாலி,
பாக்தாத் திருடன்
‘மன்னாதி மன்னன்,
ராஜா தேசிங்கு,
அரசிளங்குமரி,
நல்லவன் வாழ்வான்,
சபாஷ் மாப்பிளே,
தாய் சொல்லைத்தட்டாதே,
திருடாதே,
குடும்பத்தலைவன்,
மாடப்புறா
பாசம்,
ராணி சம்யுக்தா,
தாயைக்காத்த தனையன்,
விக்கிரமாதித்தன்

ஆகிய படங்கள் வெளிவந்தன.

காட்சி :
————–

நாடகக்குழுவைத் தொடங்கி,’இன்பக்கனவு’
‘இடிந்த கோயில்’, ‘அட்வகேட் அமரன்’
ஆகிய நாடகங்களைத் தமிழகம் முழுவதும்
நடத்தினார். 1953 முதல் 1963 வரையில்
பல பொது நல அமைப்புகள் நாடகங்கள்
நடத்திப் பயன்பெற்றன. கல்லூரிகள்,
பள்ளிகள் உயர்ந்தன. இயற்கையின்
சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு
உதவினார். தியாகராயர் கல்லூரிக்கு
நிதி திரட்ட உதவினார். பம்பாய்த்
தமிழ்ச்சங்கக்கட்டட நிதிக்கு உதவி.
மழைக்கோட்டு; ரிக்ஷா தொழிலாளர்களுக்கு
எம்.ஜி.ஆர். வழங்கினார்.

காட்சி :
————–

சீர்காழியில், நாடக மேடையில்
குண்டுமணியைத் தூக்கிப்போட்டபோது
காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.(1959)
நாடக மேடையில் கண்ணீர் விட்டு
அழுதவர்களை எம்.ஜி.ஆர். தேற்றிய மன உறுதி.

காட்சி :
————–

செய்தி கேள்விப்பட்டு, வி.என்.ஜானகி
பதறியபடி ஓடிவந்தார். அப்போது
இரண்டாவது மனைவி சதானந்தவதி
உயிரோடு இருந்தார். எம்.ஜி.ஆருடன்
ஒரே இல்லத்தில் அவருக்கும்
சதானந்தவதிக்கு உதவியாக இருந்தார்.

காட்சி :
————–

பொதுத்தேர்தலில் சூறாவளி சுற்றுப்
பயணம்.(1957)

“கழகத்திற்கு நிதியளிப்பதைவிட, உன்
முகத்தைக்கண்டால் லட்சோப லட்சம்
மக்கள் வாக்களிப்பார்கள். அப்படி
ஆதரவைத்திரட்டு” என்று அண்ணா கூறினார்.

இயக்கம் 15 இடங்களில் வெற்றி.
பேரறிஞர் அண்ணா தலைமையில்
கழகம் சட்டப்பேரவையில்
புகுந்தது.

காட்சி :
————–

மாநகராட்சித்தேர்தல்களில் கழகம்
வெற்றிபெற எம்.ஜி.ஆர். அரும்பணி.
(1959-1964)

காட்சி :
————–

பொதுத்தேர்தலுக்காகப்பிரச்சாரம்.
(1962) 50 பேர் தேர்வு.

காட்சி :
————–

தமிழ்நாடு சட்டப்பேரவை மேலவை
உறுப்பினராக ( MLC) அண்ணாவின்
விருப்பத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்டார்.(1963)

கருத்து வேறுபாடு கொண்ட மற்றவர்கள்
சொற்களால் ஆத்திரம் கொண்டு
பதவியை உதறி எறிந்தார்.

காட்சி :
————–

ஆனந்த ஜோதி, தர்மம் தலைகாக்கும்,
கலை அரசி, காஞ்சித்தலைவன்,
கொடுத்து வைத்தவள், நீதிக்குப்பின் பாசம்,
பணத்தோட்டம், பரிசு, பெரிய இடத்துப்பெண்,
தெய்வத்தாய், என் கடமை, படகோட்டி,
பணக்காரக்குடும்பம், தாயின் மடியில்,
தொழிலாளி, வேட்டைக்காரன் ஆகிய
படங்கள் வெளிவந்தன.

காட்சி :
————–

‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் நடிக்க
மலர்களால் அமைந்த ஆடை அணிந்து
மங்கை ஒருவர் வருகிறார். அவர்தான்
(இன்றைய முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள்)

புரட்சிச்செல்வி ஜெயலலிதா அவர்கள்.
புதுமுகமான அவரை மக்கள் திலகம்
அரங்கத்திற்குள் நுழைந்ததும்…
‘நல்வரவு’… ‘ WELCOME ‘
என்று கூறி வரவேற்கிறார்.
அவர் வணக்கம் தெரிவிக்கிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *