POST: 2018-03-06T11:47:27+05:30

சங்கர மடத்துத் தூண் சாய்ந்தது !
——————————————————–

காஞ்சித் திருமடத்தின் தலைவராக வீற்றிருந்த ஜெயேந்திரரை நான் பலமுறை கண்டு பேசி இருக்கிறேன். ஏறத்தாழ வயதால் நான் ஒத்திருந்ததை நினைவூட்டுவார்கள்.

ஒருமுறை காஞ்சி மடத்தில் திருக்குறள் தொடர் சொற்பொழிவு ஆற்ற வேண்டும் என்றார்கள் .

அருட்செல்வரோடு நான் பலமுறை அவரைக் கண்டு பேசியிருக்கிறேன்.

வேதங்கள் படித்து மூழ்கிய அளவுக்குத் தமிழ்க் கலைகளிலும் ஆழ்ந்து மகிழும் வாய்ப்பு இல்லையே என்று ஒரு முறை வருந்தினார் .

வள்ளற் பெருமான் கருத்துகளைப் பரப்புவது மிகச் சிறந்த பணியாகும் என்று அருட்செல்வரைப் போற்றினார்.
காஞ்சி மடம் எப்படித் துணை செய்யலாம் என்று ஆர்வம் காட்டினார் .

ஒருமுறை கேரளத்தில் இருந்து மருந்து கொண்டு வந்திருக்கிறார்கள், நீரிழிவுக்கு இது பொருந்துமா என்று நீங்கள்தான் சொல்லவேண்டும் என்று மருத்துவரையே அனுப்பினார் .

அல்லையன்ஸ் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு வந்தபோது தமிழுக்குத் தான் முதலிடம் என்று கூறியதைக் கேட்டு எல்லோரும் நெகிழ்ந்தார்கள் .

வீண் வம்புச் சூழலுக்கு ஆட்பட்டுச் சில நிலைகளில் அவலமுற்றாலும் மக்கள் சமுதாயத்திற்கு நலம் காண வேண்டும் என்னும் குறிக்கோளில் நிலையாக நின்றதை நினைத்து நம் நெஞ்சம் கலங்குகிறது .

—– ஔவை நடராசன்

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *