=========================================
வேலேந்தி ஆண்ட பாண்டியரை வேறெங்கே தேடுவோம் !
=========================================
நீதியரசர் இரத்னவேல் பாண்டியன்
——————————————————–
பொங்கும் மனிதநேயப் பொலிவோடு
எங்குக் கண்டாலும் மகனைக் காண்பது போல
நலம் வினவும் நயத்தக்க நாகரிகத்துக்கு
வடிவாய் விளங்கிய பாண்டிய வேந்தர்
முதிர்ந்து கனிந்த நிலையில் உதிர்ந்தது
தமிழுலகத்துக்குத் தாங்கொணாத பெருங்கலக்கத்தைத் தருகிறது .
தகுதியும் செப்பமும் வாய்ந்த தனிப்பெரும் நீதிப் பேரரசராக அவர் ஆற்றிய பணிகள் என்றும் போற்றுதற்குரியன.
இந்நாளில் அரசு பணியாளர்கள் நிறைவான ஊதியம் பெறுவதற்கு எறத்தாழ இருமடங்கு ஏற்றித்தந்த பெருமை இவரையே சாரும்
இனமான உணர்வோடு ஓங்கித் திகழ்ந்ததோடு
தன் மாறாக் கடமையாக தம் நிறைவாழ்வில் திருப்புடைமருதூர்த் திருக்கோயிலை
கண்ணுங்கருத்துமாக வடிவாக்கி
திருப்புடைமருதூர்த் தலவரலாறு புராணம் வெளியிட்டு நெகிழ்ந்ததை நான் இன்றும் நினைவு கூர்கிறேன்.
சமுதாயத்தைத் தலைநிமிரச் செய்ததோடு சமயப் பணியிலும் முன்னின்று தமது சிற்றூரை அழகிய சிவபுரியாக மாற்றியதை எவரும் மறக்க முடியாது.
துணைவியாரின் மறைவிற்குப் பிறகு
அவர் துவண்டு சோர்ந்தே இருந்தார்.
நண்பர் பிச்சை அவர்களிடத்தில் அவ்வப்போது
பேசி அவர் நலம் வினவிவந்தேன்.
இதுதான் வாழ்வின் முடிவென்று தெரிகிறது.
வேலேந்தி ஆண்ட பாண்டியரை
வேறெங்கே தேடுவோம்.
நினைவகலா
—– ஒளவை நடராசன்

Add a Comment