POST: 2018-03-19T10:11:47+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-183
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

காட்சி :
————

சாதனைகள்…..
மேல்சபைக் கலைப்பு,
25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு.
ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தில் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி கோரிக்கை!
சத்துணவுத் திட்டத்துக்கு 200 கோடி.

காட்சி :
————

எம்.ஜி.ஆர் ரசிகர் மன்ற மாநாடு மதுரையில் கூடியது. கொள்கை பரப்புச் செயலாளராகப் புரட்சிச்செல்வி ஊர்வலத்தைத் தொடக்கி வைக்கிறார். புரட்சித்தலைவர் பாராட்டுரை! 13.7.86
ஆறு அடி நீளமுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிச் செங்கோலை முதல்வர் புரட்சித் தலைவரிடம் புரட்சிச் செல்வி வழங்குதல். 14.7.86
புரட்சித்தலைவர் பாராட்டுரை….
குரல்,
படக்காட்சி காண்பிக்கலாம்.

காட்சி :
————

மருத்துவப் பரிசோதனைக்காகப் புரட்சித்தலைவர் அமெரிக்கா பயணம். பரிசோதனை முடிந்து திரும்புகிறார். (செப்.86) படக்காட்சி அல்லது செய்தி.

காட்சி :
————

புரட்சித்தலைவர் கழகப் பொதுச்செயலாளராகிறார். அக்,1986. -செய்தி-

காட்சி :
————

கடற்கரைக் கூட்டம், புரட்சித்தலைவருக்குப் பிரதமர் ராஜீவ் காந்தி புகழ்மாலை. (ஜூலை, 1987)
படக்காட்சி

காட்சி :
————

அமெரிக்கா சென்று, பரிசோதனையை முடித்துக் கொண்டு புரட்சித்தலைவர் திரும்புகிறார். (ஆகஸ்ட், 1987)

காட்சி :
————

சென்னை, கத்திப்பாராச் சந்திப்பில் நேரு சிலையைப் பிரதமர் ராஜீவ் காந்தியைக் கொண்டு முதல்வர் புரட்சித்தலைவர் திறக்கச் செய்கிறார்.
நிகழ்ச்சி….. படக்காட்சி…..

காட்சி :
————

புரட்சித்தலைவர் சாதனைகள்.
இலவசப்பாடநூல் வழங்கும் திட்டம்,
காவல்துறையினருக்கு விருது வழங்குதல்,
தமிழ் அறிஞர்களுக்கு விருது,
பெரியார் மாவட்டம் தொடங்கியது (24.9.1979)
காமராஜர் மாவட்டம் தொடக்கம் (15.4.84)
இராமநாதபுரம் மாவட்டம்… (16.7.84)
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டம் … (17.7.84)
அண்ணா மாவட்டம்… (15.09.1985)
சிதம்பரனார் மாவட்டம் துவக்கம் (19.10.85)
ஏழை முஸ்லீம் மற்றும் விதவைகளுக்கு
இலவசமாகப் புத்தாடைகள் வழங்குதல்…
நலிந்த பிரிவினருக்கு இஸ்திரிப் பெட்டி போன்றவை வழங்குதல்…

காட்சி :
————

குடும்பத் தலைவர்…. வயது கூடிக் காணப்படுதல் (துவக்கக்காட்சி)
குடும்பத் தலைவி…
மகன் இளைஞனாகத் தோன்றுதல்.
பெண் இளமையுடன் தோன்றுதல்.
குடும்பத் தலைவர்: ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்றார் அண்ணா. அந்த ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிரிப்பில் அண்ணாவும், புரட்சித் தலைவரும் இணைந்து தோன்றுகிறார்கள்.
தலைவி: பேரறிஞர் அண்ணாவுக்குச் சிலையமைத்தார் புரட்சித்தலைவர். புரட்சித் தலைவருக்குப் புரட்சித்தலைவி சிலையமைத்து சென்னையில் பிரதமர் ராஜீவ் காந்தியைத் திறக்கச் செய்தார். தாய் உள்ளம் கொண்டவரைத் தலைவராக முதல்வராகக் கண்டோம்.
இப்போது-
52.குடும்பத் தலைவர்: தாயே தலைவியாக, முதல்வராகக் காண்கிறோம்.
புரட்சித்தலைவி சாதனைகள் உதவிகளை மக்களுக்கு வழங்கும் காட்சிகள்.
இளைஞன்: பாரதி கண்ட புதுப்பெண், பாவேந்தர் குறிப்பிட்ட புரட்சிப்பெண் நம் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி.
பெண்: சமூக நீதி காத்துச் சரித்திரம் படைத்த வீராங்கனை முதல்வர் புரட்சித்தலைவி.
குடும்பத்தலைவர்: சரித்திரம் படைத்த சாமானியர்களின் தலைவர், மக்கள் திலகம் புரட்சித் தலைவர் புகழ் இந்த மண்ணும் விண்ணும் உள்ளவரை நிலைத்திருக்கும்.
குடும்பத்தலைவர்: புரட்சித்தலைவர் பேசும்போது ‘என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே’ என்பார்.
இளைஞன்: புரட்சித் தலைவி பேசும்போது ‘புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே’ என்கிறார்.
பெண்: அவர் ‘அண்ணா’ என்று இதழ் தொடங்கினார்.
குடும்பத்தலைவி: புரட்சித்தலைவி தொடங்கிய இதழ்… ‘நமது எம்.ஜி.ஆர்’
குடும்பத்தலைவர்: அவர் இல்லம் சத்யா இல்லம்.
இளைஞன் : புரட்சித்தலைவி இல்லம் வேதா நிலையம்.
53.குடும்பத்தலைவர்: தாயைப் போற்றும் தன்னிகரற்ற தலைவர்களைத் தாய் தமிழகமும் தாய்மொழி தமிழும் மறக்காது.
அனைவரும் குரலில் : புரட்சித்தலைவர் புகழ் வாழ்க.
புரட்சித்தலைவர்
புரட்சித்தலைவர்
மக்களுடன் தோன்றும் காட்சிகள்
‘தாயில்லாமல் நானில்லை’ – பாடல் ஒலிப்பது.
‘நாளைய வெற்றியைச் சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும்- பாடல்
புரட்சித்தலைவர் வணக்கம் கூறும் காட்சி மக்களுக்குள் மறைவது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *