மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-184
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————
”அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சித்தன்
மெய்வருத்தக் கூலிதரும்.”
வள்ளுவன் தந்தத் தெள்ளுதமிழ்க்குறட்பா
ஒலிக்கிறது.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பத்மாசனம்
போட்டு அமர்ந்திருக்கின்றார்.
(பல்லாண்டு வாழ்க படக்காட்சி, பாடல்காட்சி)
தந்தை பெரியார் உருவச்சிலை திறப்பு-
அண்ணா மேம்பாலம் அருகில்,
பாபு ஜெக ஜீவன்ராம் அருகில் எம்.ஜி.ஆர்.
தந்தை பெரியார் குரல்- எம்.ஜி. யாருக்குப்பாராட்டு! (பெரியார் சிலை)
”எம்.ஜி.ஆருக்கு ரொம்பப் பெரிய மனசு. என் மேலே ரொம்பப் பிரியம்,
ஏழைகளுக்கு உதவும்
கருணை உள்ளம்
கொண்டவர்.”
பேரறிஞர் அண்ணா சிலை திறப்பு
டாக்டர் ஏ. ராமசாமி முதலியாருடன் எம்.ஜி.ஆர்.
பேரறிஞர் அண்ணாவின் குரல் – எம்.ஜி.ஆருக்குப் புகழ்மாலை!
“எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பை நாடு அறியும். எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது என்னை நானே பாராட்டிக் கொள்வதாகக் கருதப்படும். உண்மைதானே! எம்.ஜி.ஆர் என்றால் அவர் தாங்கியுள்ள கொள்கை எதுவென்பதை நாடு அறியும்.
முல்லைக்கு மணம் உண்டென்பதைக் கூறவா வேண்டும்?
இந்தக் கனி தங்கள் மடியில் விழாதா என்று பலர் எதிர்பார்த்தனர்.
அது என் மடியில் வந்து விழுந்தது. என் இதயத்தில் எடுத்து வைத்துக் கொண்டேன்.”
மூதறிஞர் இராஜாஜி சந்திப்பு- இருவரும் நெருக்கமாக உள்ள புகைப்படங்கள்.
இராஜாஜி குரல்…………………..
“தனித்துப் போராடுகிறார் எம்.ஜி.ஆர். அவரை அப்படி விட்டு விடாதீர்கள். அர்ச்சுனனைப் போல் வெற்றி வீரர் ஆக்குங்கள்”
அன்னை…. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் எம்.ஜி.ஆர் காட்சியளிக்கும் படங்கள்
இந்திரா காந்தி குரல்……
உலகத்தலைவர்கள், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ள மேதைகளுடன் எம்.ஜி.ஆர் உள்ள புகைப்படங்கள்…………………
மக்களிடம் கருணை உள்ளம் கொண்ட மகத்தான தலைவர் என்பதை வெளிப்படுத்தும் படங்கள்………
மழைக்கோட்டு வழங்கியது….. ஏழைகளுக்கு உணவளிப்பது …. முதியோர்…… குழந்தைகளிடம் உண்மையான பரிவு காட்டும் படங்கள்…..
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குத் தங்க வாள் வழங்கியது, பாராட்டு, பரிசளிப்பு முதலிய படங்கள்……

Add a Comment