POST: 2018-03-26T09:55:27+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-186
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
காட்சி :
————

எம்.ஜி.ஆர் தந்தை மருதூர் கோபாலன் கண்டியில் மாஜிஸ்திரேட்டாகவும், கல்லூரி முதல்வராகவும் பணிபுரிந்தார். எம்.ஜி.ஆருக்கு இரண்டு வயதாகும்போது பெற்றோர் திரும்பினர் தாயகத்திற்கு!

உறவினர் உதவிப்புரியாத நிலையில் தந்தை கோபாலன் மரணமடைந்தார்.

மனம் வெதும்பிய சத்தியபாமா கணவரை இழந்த நிலையில், தன் உறவினர்கள் சிலர் முன்னதாகவே கும்பகோணத்தில் இருந்ததால் அங்கே செல்கிறார்.
வேலுநாயர், நாராயணநாயர் ஆகிய இருவரும் சத்யபாமா குடும்பத்துக்கு ஆதரவாக இருக்கின்றனர். சக்ரபாணியும், எம்.ஜி.ஆரும் குடந்தையில் ஆனையடி பள்ளியில் மூன்றாம் வகுப்புவரை படிக்கின்றனர். அதற்கு மேல்படிப்பைத் தொடரக் குடும்ப வசதி இடம் கொடுக்கவில்லை.

பள்ளியில் கல்வி பயிலும்போதே முதன் முதலில்‘லவகுசா’ நாடகத்தில் நடித்தல். (இராமன் பெயர் கொண்ட அவர் இராமரின் மகன் வேடத்தில் முதலில் நடித்தார்)

பள்ளியில் மாணவர்களுக்காக வாதாடி, வகுப்புக்கு மாணவர்த்தலைவராதல். தண்ணீர்ப் பானைத் தகராறு சம்பவம்.

பிளாஷ்பேக்

நாடகத்தைக் கண்டு ரசித்தவர்கள் எழுப்பும் ஆரவாரம் கரவொலி!
சத்யபாமா அம்மையார் அடுத்த வீட்டு வாசலில் நிற்கிறார். அந்த வீட்டுப் பெண்மணி ஒருமுறத்தில் அரிசி நொய் கொண்டு வந்து போடுகிறார். முந்தானையில் அதனை ஏந்தியபடி மறைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.

இதனை எம்.ஜி.ஆர் கவனித்துக் கொண்டிருக்கிறார். அன்னை சத்தியா நொய் அரிசியைக் களைந்து, கஞ்சி காய்ச்சிக் கொண்டு வருகிறார். பிள்ளைகள் இருவருக்கும் கொடுத்துவிட்டு, தான் மட்டும் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றிப் பருகுகிறார்.

எம்.ஜி.ஆர் இதனைக் கூர்ந்து கவனிக்கின்றார். அவர் கண்கள் கலங்குகின்றன!

“ராமு….. சக்கு….. வயிறுநிறைஞ்சுதா……? தாய் கேட்கிறார்.

“எங்க வயிறு நிறைஞ்சுதம்மா……!

எங்களைப் பெத்த வயிறு காயுதே….!

எம்.ஜி.ஆர் கண்கள் கலங்குகின்றன.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *