POST: 2018-03-28T10:20:22+05:30

ஆனந்த விகடன் 28.07.1996ம் நாள் இதழில்
‘லைட்ஸ் ஆன் ‘ பகுதியில்
பத்மஸ்ரீ ஔவை நடராசன் குறித்து
இடம்பெற்ற செய்தி
==============================================

சன் டி.வி.-யில் நவீன காலத்துப் பெண்களுக்கும் தமிழ்ப் பண்பாட்டுக்கும் சரிப்பட்டு வருமான என்ற கருத்தரங்கம் நடந்தது. தலைமை தாங்கிய டாக்டர் அவ்வை நடராசன் தெரிவித்த ஒரு திடுக்கிடும் தகவல்,

“பெறுமவற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கட் பேறல்ல பிற”

என்ற குறளுக்கு உரை எழுதிய பரிமேலழகர்,

‘அறிவறிந்த’ என்று வள்ளுவர் குறிப்பிட்டிருப்பதால் அது பெண்களுக்குப் பொருந்தாது என்று கூறியிருக்கிறார்.

போச்சுடா சாமி! பெண்ணீய இயக்கக்காரர்கள் பரிமேலழகர் மேல் பாய முடியாது. அகப்பட்டுக் கொண்டிருப்பவர் அவ்வை நடராசன்தான். தனக்கு z plus security cover தர வேண்டும் என்று ‘அவ்வை’ யார் மத்திய அரசிடம் விண்ணப்பித்து வைத்துக்கொள்வது நலம்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *