POST: 2018-04-01T18:11:56+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-190
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

1959: சீர்காழியில் நாடகம் நடந்தபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. நாடகமேடையில் அழுதவர்களை ஆறுதல் கூறித் தேற்றிய எதையும் தாங்கும் இதயம். செய்தி அறிந்து வி.என்.ஜானகி பதறியபடி ஓடி வந்தார். படுக்கையில் இருந்த சதானந்தவதி கண்ணீர் விட்டார். ‘மருதநாட்டு இளவரசி’யில் மலர்ந்து, கனிந்த காதல், மணத்தில் முடிந்தது. எம்.ஜி.ஆருடன், அதே வீட்டில் வி.என்.ஜானகி வாழத் தொடங்கினார்.

1959-64 சென்னை மாநகராட்சித் தேர்தல்களில் கழகம் வெற்றி பெற அயராது அரும்பணியாற்றினார்.

1957-62 பொதுத் தேர்தல்களில் சூறாவளிச் சுற்றுப் பயணம். அண்ணா… ‘கழகத்திற்கு நிதி அளிப்பதைவிட, உன் முகத்தைக் காண்பித்து லட்சோப லட்சம் மக்கள் ஆதரவைத் திரட்டு’ என்று கூறினார். திருவண்ணாமலை இடைத்தேர்தல், பொதுத் தேர்தல்களில் எம்.ஜி.ஆர் பிரச்சாரம், நிதி உதவி பேருதவியாக அமைந்தது.

1963 தமிழ்நாடு சட்டப் பேரவை மேலவைக்கு அண்ணா விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டார். கருத்து வேறுபாடு கொண்டவர்கள் சொற்களால் ஆத்திரப்பட்டு, அண்ணாவைக் கேட்காமலேயே இரண்டு ஆண்டுகளில் பதவியை உதறி எறிந்தார்.

12.1.1967 துப்பாக்கியால் எம்.ஜி.ஆர் வீட்டில் எம்.ஆர்.ராதா அவரைச் சுட்டுவிட்டு, தானும் சுட்டுக் கொண்டார். இராயப்பேட்டை மருத்துவமனையில் எல்லோரும் எம்.ஜி.ஆர் உயிரைக் காப்பாற்றப் போராடியபோது, ‘அண்ணனைப் போய்க் கவனித்துக் காப்பாற்றுங்கள்’ என்று தன்னைச் சுட்டவரைக் கவனிக்கச் சொன்ன அரிய பண்பு. ‘தர்மம் தலை காக்கும்’ படத்தின் பெயர் – பழமொழி மட்டுமல்ல- எம்.ஜி.ஆர் வாழ்வில் நடந்த உண்மை! உயிரோடு போராடி மறு பிறவி எடுத்தார். குண்டு ஒன்று பிரிய மனமின்றித் தொண்டையில் தங்கிவிட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *