மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-193
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் காட்சி.
குரல்கள்
எதிரொலி….
பிளாஷ்பேக்:
Flash Back
விமானம் பறக்கிறது!
விமானத்தின் பணிப்பெண் இருக்கையில் ஓர் அழகான குழந்தை பெல்ட் கட்டப்பட்டு, அமைதியாக அமர்ந்து சாக்லேட் சாப்பிடுகின்றது!
(விமானத்தில் பயணம் செய்வோர் வியப்புடன் பார்க்கின்றனர்)
ஒருவர்: How Bold sweet child she is?
இன்னொருவர்: See… The daringness of that cute sweet child!
பெண்மணி கணவனிடம்: நம்ப.. குழந்தை வீட்டிலே தனியா இருந்தாலே கத்தி ஊரைக்கூட்டிடுவா!
இந்தக் குழந்தையைப் பாருங்க… வானத்திலே, விமானத்திலே என்ன சமத்தா… துணிச்சலா இருக்கு! புத்திசாலி குழந்தை! ஆமாம்… யார் இந்தக் குழந்தை…?
புகைப்படக் கண்காட்சி!
அழகான பெண் குழந்தை படத்தின் அருகில் ஒருவர் நிற்கிறார்.
பார்வையாளர்:புகைப்படக் கண்காட்சியில் ஓவியத்தை… ஏன் வைத்திருக்கின்றீர்கள்?
புகைப்படக்காரர்:இது ஓவியமல்ல… புகைப்படம்தான்! அதை எடுத்த எனக்கு, ஓவியம் போல் உள்ள இந்தக் குழந்தையினால்… இந்தப் படத்துக்கே தங்கப் பதக்கம் கிடைத்திருக்கிறது!
பார்வையாளர்: (வியப்போடு) உண்மையாகவா….? யார் இந்தக் குழந்தை!
கான்வென்ட் சீருடையில் குழந்தை
ஒருவர்: Is this child studying….. ?
கார்டிரைவர்: yes!
அவர்: In which school the child studying?
டிரைவர்: Holy Angel!
அவர்: She is also a Angel!

Add a Comment