POST: 2018-04-13T10:07:34+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-197
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’
===========================================

1.1.1968: இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையில் உலகமே வியக்கும் அளவுக்குப் பிரமாண்டமாகப் பிரமாதமாக… அண்ணா முதல்வராக இருந்த இந்தச் சமயத்தில் நடந்தது. (மாநாடு ஊர்வலக் காட்சி… இதரக்காட்சிகள்). தமிழ் மாநாடு மடல் வெளியிடும் குழு உறுப்பினராக எம்.ஜி.ஆர் பணி. ‘எம்.ஜி.ஆர். ஓர் கவிதை’ எனப் பேரறிஞர் அண்ணா பாராட்டு!

சென்னை, அண்ணா சாலையில் எம்.ஜி.ஆர் தன் சொந்தச் செலவில் பேரறிஞர் அண்ணா சிலையை அமைத்தார். டாக்டர் ஏ.ராமசாமி முதலியார் திறந்து வைத்தார்.

1968: ‘அடிமைப்பெண்’ படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகராகச் சிங்கப்பூர் சினிமா ரசிகர் சங்கம் தேர்ந்தெடுத்தது.

1969: ‘அடிமைப் பெண் படத்திற்கு ‘பிலிம்பேர்’ பரிசு. தமிழக அரசு பரிசு. ‘நம் நாடு’ படத்திற்குச் சினிமா ரசிகர் சங்கம் பரிசு! ‘அடிமைப் பெண்’ படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தோன்றும் காட்சி. ‘அம்மா என்றால் அன்பு’ என்று எம்.ஜி.ஆர் போலவே தாய் மீது பாசமும், பக்தியும் கொண்ட ஜெயலலிதா, அன்னையைப் பற்றியே முதன் முதலாகப் பாடினார். பாடல் காட்சியில் இருவரும் தோன்றுதல்! ‘நம்நாடு’ படத்தில் இருவரும் தோன்றும் காட்சி! (இருபடங்களும் 25 வாரம் ஓடிப் பெரு வெற்றி பெற்றவை)

3.2.1969 பேரறிஞர் அண்ணா மறைவு. இராஜாஜி மண்டபத்தில் அண்ணாவின் உடலை அவர் தயாருக்கும் காண்பித்தல். ஊர்வலத்தில் சோகமாக வேனில் வருவது. கட்சியின் நலன் கருதிச்செயல்பட்டு, ஒற்றுமையும் நன்மையும் விளையுமெனக் கலைஞர் கருணாநிதியை முதலமைச்சராக்கப் பாடுபடுகிறார். அதனால்அவர் முதல்வராகிறார். கட்சியின் பொருளாளராக ஏகமனதாகத் தேர்வு.

1971: பொதுத்தேர்தலில் கழக வெற்றிக்காக இரவு, பகலாகப் பல நாட்கள் சூறாவளி சுற்றுப்பயணம். மீண்டும் அவர் தொகுதியில் வெற்றி பெற்றார்.

10.7.72 : ‘பாரத்’ விருதுபெற்ற எம்.ஜி.ஆர் சிங்கப்பூருக்குக் கலைக்குழுவுடன் பயணம். ஜெயலலிதா சென்றார்.

1.10.1972: எம்.ஜி.ஆர் மன்றங்களின் ஆலோசனைக் கூட்டம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கருத்து முழக்கம்.

8.10.1972: திருக்கழுக்குன்றத்தில் வரலாறு படைத்த மாபெரும் கூட்டம். புரட்சித்தலைவர், கழகத் தலைமையிடம் கணக்குக் கேட்டு, ஊழலை ஒழிக்கத் திட்டம் தருகிறார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *