ஜி.யு.போப் அவர்களின் 198வது பிறந்த தினம்
**************************************************************
திருவாசகத் திலகம் கலங்கிய கண்ணீர்
=====================================
சமயப் பணி பரப்ப வந்து, சமயத் தமிழின் சாரத்தினைப் பருகித் திருவாசகத்தை ஆங்கிலத்தில் வழங்கிய பெருந்தகை டாக்டர் ஜி.யு.போப் அவர்களை இன்று நினைவு கூர்வது தமிழரின் கடமையாகும்.
“என்னுடைய கடந்த 80ம் அகவையில் நாள்தோறும் திருவாசகப் பக்கங்களைப் புரட்டுகிறேன். இந்த நினைவுகளில்தான் தங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். என் விழிகள் நனைவதால், எழுதிய கடிதத்தின் மய்யெழுத்துக்கள் கலைந்தன. இதனை ஏற்றுக்கொள்க” என்று நீதியரசர் ஒருவருக்கு எழுதிய கடிதம் நமது நெஞ்சை நீர்ப்பந்தமாக்குவதாகும்.
திருவாசகச் செம்மல் டாக்டர் போப் பெருமகனாரின் நினைவு எந்நாளும் நிலைத்திருப்பதாக.
—– பத்மஸ்ரீ ஔவை நடராசன்

Add a Comment