மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-202
—————-
===========================================
புரட்சித்தலைவரைப் பற்றிய நாகை தருமன் அவர்களின் ‘ஒளி, ஒலிக்காட்சி’ (பகுதி-38)
===========================================
மாநிலங்கள் அவைத் தேர்தலில் புரட்சி செல்வி ஜெயலலிதாவைப் போட்டியிடச் செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தார்.
அண்ணா அமர்ந்து கொள்கை முழக்கமிட்ட
இருக்கையில் (185) அமர்கிறார்.
அண்ணாவின் குரல்:
ஆங்கிலப் பேச்சு
பத்திரிகையாளர்களிடம் புரட்சிச் செல்வி ஜெயலலிதா கூறுகிறார்
“மாநிலங்கள் அவையில் நான் அறிஞர் அண்ணாவின் புகழைக் காப்பாற்றும் வகையில் பணியாற்றுவேன். நான் அந்த வரிசையில் மிகச் சிறியவள் என்றாலும், பேரறிஞர் அண்ணாவின் உயர்ந்த தரத்திற்கு மாசு நேராவண்ணம் செயல்படுவேன்!”
பிரதமர் இந்திரா தன் இல்லத்திற்குச் செல்வி ஜெயலலிதாவை அழைத்து விருந்து தருகிறார். அன்னை இல்லாத குறை தீர்க்கக் கிடைத்த அருமருந்தாக அவரை புரட்சி செல்வி நினைக்கிறார். மகளைப் போல் அடிக்கடி அழைத்து அளவளாவி அன்பு காட்டுகிறார்.
தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் புரட்சிச் செல்வி புகழ் ஓங்குகின்றது
புரட்சித் தலைவர் மகிழ்கிறார். மற்ற சிலர் மனம் வெதும்புகின்றனர்.
1983: சென்னைப் பல்கலைக் கழகம், புரட்சித் தலைவருக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறது
1984: தன் வளர்ச்சியை விரும்பாத சிலரால், புரட்சித் தலைவருக்கு இக்கட்டான நிலை ஏற்படுவதைத் தவிர்க்கப் புரட்சித் தலைவி நினைத்தார். இதனால்…..
கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்தார். (ஆகஸ்ட்) அவர் ராஜினாமாவை ஏற்க வேண்டும் என்று சிலரும், ஏற்கக் கூடாது என்று பலரும் புரட்சித் தலைவரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
செயற்குழு, பொதுக்குழுவில் புரட்சித் தலைவர் விலகல் கடிதத்தை ஏற்று அவரை விடுவித்தார்
2.10.84: அண்ணல் காந்தி சிலைக்குப் புரட்சித் தலைவர் மாலை அணிவித்தார்.
6.10.1984: அப்பல்லோ மருத்துவமனையில் புரட்சித் தலைவர் அனுமதிக்கப்பட்டார்.
பிரதமர் இந்திரா, முதல்வர் புரட்சித் தலைவர் உடல் நலம் குறித்து மருத்துவமனைக்குப் போன் செய்து அறிகிறார்.

Add a Comment