POST: 2018-04-30T10:17:44+05:30

பத்மஸ்ரீ ஔவை நடராசன் அவர்களைப் பற்றி,
தினமணி தில்லி பதிப்பின் மேனாள் செய்தியாளர் மற்றும் தலைமைச் செயலக
மேனாள் மொழிபெயர்ப்பாளர்
திரு.பா.கிருஷ்ணன் கூறியது
===============================================

ஐயா, அவ்வை நடராசனாரிடம் நான் கண்ட வியப்புக்குரிய குணாதிசயங்கள் பல..

யாவரையும் மதிப்பார். வயதில் சிறியவன் பெரியவன் என்றும் பாராமல்… சில தமிழ்ப் புலவர்கள் குண்டு சட்டியில் இருந்துகொண்டு அதை விட்டு வெளியே வரமாட்டார்கள். அவ்வை அவர்கள் பரந்துபட்ட பார்வை உடையவர். சிறந்த ஆங்கிலமும் பேசுவதைக் கேட்டு வியப்படைந்திருக்கிறேன். நம் நாட்டில் பகுத்தறிவாளர்கள் பக்தர்களின் மனத்தைப் புண்படுத்துவதை முதல் தொழிலாகக் கொண்டிருப்பர்.

பக்தர்களோ மூடத்தனமாக பகுத்தறிவை முற்றிலுமாக நிராகரிப்பர். எனக்குத் தெரிந்து ஆழ்வார்கள், வள்ளலார், சைவத் திரு மாநாடுகளிலும் நெகிழச் செய்யும் பேச்சாற்றல், திராவிட இயக்கத்தினரின் கூட்டத்திலும் சிறந்த உரையாற்றல் நிகழ்த்துபவர். இதில் என்ன விசேஷம் என்றால், இரண்டிலும்முரண்பாடே தெரியாது. அப்படி ஒரு நேர்த்தியான கோட்பாட்டை இவரிடம் மட்டுமே பார்க்க இயலும். ஆழ்ந்த பேரறிஞர். வணங்கத் தக்கவர்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *