மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-208
—————-
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எம். ஜி. ஆர். வாழ்க்கையில் 123 நாட்கள்
=============================================
எம். ஜி. ஆர். ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டது முதல் வீடு திரும்பியது வரை, 123 நாட்களில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:-
மருத்துவமனையில் அனுமதி:
————————————————
5-10-1984 முதல் அமைச்சர் எம். ஜி. ஆர். உடல் நலக் குறைவால் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5-ந் தேதி இரவு சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
7-10-84 ஜனாதிபதி ஜயில்சிங் எம். ஜி. ஆர். குணம் அடைய வாழ்த்துத் தந்தி அனுப்பினார்.
10-10-84 எம். ஜி. ஆர். பைல்களைப் பார்த்தார். உடல் நிலை நன்கு தேறி வருகிறது என்று, மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டது.
உடல் நிலை பாதிப்பு :
———————————–
12-10- 84 கவர்னர் குரானா, எம். ஜி. ஆரை போய்ப்
பார்த்தார். கவர்னருடனும் டாக்டர்களுடனும் எம். ஜி. ஆர். பேசிக் கொண்டு இருந்தார்.
அன்று இரவு அவருக்கு “ஸ்டிரோக்” (பக்கவாதம்) வந்து உடலின் வலது பக்கம் செயல் இழந்தது. மூளை யில் வீக்கம் ஏற்பட்டது.
14-10-84 எம். ஜி. ஆருக்கு சிகிச்சை அளிக்க அமெரிக்க டாக்டர்களுக்கு அழைப்பு அனுப்பப்பட்ட து
15-10-84 தேவைப்பட்டால் எம். ஜி. ஆரை சிகிச்சைக்காக அமெரிக்கா கொண்டு செல்ல ஒரு ராணுவ விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டது.
இந்திரா வருகை :
—————————-
16-10-84 பிரதமர் இந்திரா காந்தி, அப்பல்லோ ஆஸ்பத்திரி வந்து எம். ஜி. ஆரை பார்த்தார். விரைவில் குணம் அடைய வாழ்த்து கூறிச் சென்றார்.
டாக்டர்கள் சிபாரிசு :
———————————-
17-10-84 அமெரிக்க டாக்டர்கள் பிரீட்மென், கிறிஸ்டோபர் பிளாக், ஸ்ரீபா தராவ், ஜான் ஸ்டிர்லிங் மேயர் ஆகியோர் சென்னை வந்து எம். ஜி. ஆரை பரிசோதனை செய்தனர்.
”அவரது மூளையில் உள்ள வீக்கம் குறைந்து இருக்கிறது. எனவே அபாயக் கட்டத்தைத் தாண்டிவிட்டார். ஆனால் சிறுநீரகக் கோளாறு ஏற்பட்டுள்ளதால் மாற்று சிறுநீரகம் பொருத்த அமெரிக்கா கொண்டு செல்ல வேண்டும்” என்று அமெரிக்க டாக்டர்கள் கூறினார்கள்.
பிரார்த்தனை :
————————
18-10-84 எம். ஜி. ஆர். குணம் அடையக் கோவில் களில் பிரார்த்தனை.
20-10-84 ஜப்பான் டாக்டர்கள் கானுவும் நக்கமோராவும் சென்னை வந்து 2 மணிநேரம் பரி சோதனை செய்தனர். “மூளையில் ஏற்பட்ட வீக்கத்தை ரத்தக் கட்டி) அகற்றச் சில நாட்கள் கழித்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்” என்று கூறினார்கள்.
முன்னேற்றம் :
———————–
22-10-84 எம். ஜி. ஆருக்கு மூளையில் ஏற்பட்ட கட்டியினால் ஆபத்து இல்லை. அவரின் உடல் நிலை யில் மகிழ்ச்சிதரும் அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது” என்று ஜப்பான் டாக்டர்கள் அறிவித்தனர்.
27-10-84 எம். ஜி. ஆர். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. “டேப்’பில் ஒலிபரப்பப்பட்ட கர்நாடக இசையைக் கேட்டு மகிழ்ந்தார்.

Add a Comment