POST: 2018-05-12T13:58:07+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-208
—————-

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எம். ஜி. ஆர். வாழ்க்கையில் 123 நாட்கள் (தொடர்ச்சி)
=============================================

இந்திரா கொலை
===================
31-10-84 பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப் பட்டார். புதிய பிரதமராக, ராஜீவ் காந்தி பதவி ஏற்றார். அதிர்ச்சியைத் தாங்க மாட்டார் என்பதால், இந்திரா மரணச் செய்தி எம். ஜி. ஆருக்கு தெரிவிக்கப்பட வில்லை .

1-11-84 எம். ஜி. ஆரை சென்னை டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், மூளை வீக்கம் அடியோடு குறைந்தது தெரியவந்தது.

2-11-84 எம். ஜி. ஆர். படுக்கையில் இருந்து எழுந்து நடக்க முயன்றார்.

மூளை கட்டி மறைந்தது
=====================

3-11-84 ஜப்பான் டாக்டர் கானு மீண்டும் சென்னை வந்து எம். ஜி. ஆரை பரிசோதனை செய்தார். “மூளை யில் இருந்த வீக்கம் முழுவதும் நீங்கி விட்டதால் மூளை யில் ஆபரேஷன் தேவை இல்லை என்றும், சிறுநீரக
சிகிச்சைக்காக இனி அமெரிக்கா கொண்டு செல்ல லாம்” என்றும் கூறினார்.

அமெரிக்கா பயணம்
======================

5-11-84 இரவு 10-45 மணிக்கு எம். ஜி. ஆர். சிறிய ஆஸ்பத்திரி போல் அமைக்கப்பட்ட தனி விமானத்தில் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மனைவி ஜானகி அம்மாள். அமைச்சர் ஹண்டே தனிச் செயலாளர் பரமசிவம், நர்சுகள், டாக்டர்கள், உதவியாளர்கள் உள்பட 21 பேர் உடன் சென்றனர்.

6-11-84 இரவு 10-22 மணிக்கு அமெரிக்கா போய்ச் சேர்ந்தார். நியூயார்க் நகரம் எம். ஜி. ஆர். புரூக்ளினில் உள்ள டவுன் ஸ்டேட் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

7-11-84 அமெரிக்காவில் எம். ஜி. ஆர் நன்றாக இருப்பதாக டாக்டர் பிரீட்மென் தெரிவித்தார்.

8-11-84 எம்.ஜி.ஆருக்குச் சிறுநீரக மாற்று ஆபரேஷன் தேவையா என்று டாக்டர்கள் பரிசோதனை செய்தார் கள்.

14-11-84 கோட்டு, சூட்டு அணிந்து சென்ற அமைச்சர் ஹண்டேயைப் பார்த்து எம். ஜி. ஆர். சிரித்தார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *