மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-209
—————-
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எம். ஜி. ஆர். வாழ்க்கையில் 123 நாட்கள் (தொடர்ச்சி)
=============================================
சினிமா படம் :
————————–
15-11-84 எம். ஜி. ஆருக்கு அவர் நடித்த சினிமா படங்களை வீடியோவில் போட்டுக் காட்ட ஏற்பாடு.
16-11-84 தேர்தலில் போட்டியிட எம். ஜி. ஆர். சம்மதம் தெரிவித்தார்.
17-11-84 எம். ஜி. ஆர். உடல் நிலையில் துரித முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் தானாகவே நடந்தார்.
20-11-84 சக்கர நாற்காலியில் அமர்ந்து புரூக்ளின் ஆஸ்பத்திரியை எம். ஜி. ஆர். 20 நிமிடம் சுற்றிப் பார்த்தார்.
வேட்பு மனு :
———————-
22-11- 84 எம். ஜி. ஆரின் வேட்புமனுவை அமெரிக் காவில் இருந்து அமைச்சர் ஹண்டே சென்னைக்குக் கொண்டு வந்தார்.
23-11-84 ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட எம். ஜி. ஆர். வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது.
புகைப்படம் :
————————
6-12-84 அமெரிக்க ஆஸ்பத்திரியில் எம். ஜி. ஆர். உடல் நிலையில் ஏற்பட்ட முன்னேற்றத்தைக் காட்டும் எம். ஜி. ஆரின் 3புகைப்படங்களை அமைச்சர் ஆர்.எம். வீரப்பன் சென்னையில் வெளியிட்டார்.
9-12-84 அமெரிக்க ஆஸ்பத்திரியில் எம். ஜி. ஆர் சாப்பிடுவது, கை குலுக்குவது போன்றவற்றை விளக்கும் ‘வீடியோ” படத்தைச் சென்னையில் அமைச்சர் ஆர்.எம் வீரப்பன் வெளியிட்டார்.
சிறுநீரக ஆபரேஷன் :
—————————————
19-12-84 எம். ஜி. ஆருக்கு மாற்று சிறுநீரக ஆபரேஷன் 3 மணிநேரம் நடந்தது. தமிழ் நாட்டில் கோவில், மசூதி, தேவாலயங்களில் பிரார்த்தனை நடந்தது.
20-12-84 மாற்று சிறுநீரகம் நன்றாக இயங்குவதாகவும், எம். ஜி. ஆர். உடல் நிலையில் துரித முன்னேற்றம் ஏற்பட்டதாகவும் டாக்டர்கள் அறிவித்தனர்
21-12-84 எம். ஜி. ஆர். தானாக நின்று டாக்டர்களுடன் கைகுலுக்கும் காட்சிகளைக் கொண்ட வீடியோ” படத்தை அமைச்சர் ஆர். எம். வீரப்பன் வெளியிட்டார்.

Add a Comment