POST: 2018-05-14T09:23:37+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-210
—————-

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எம். ஜி. ஆர். வாழ்க்கையில் 123 நாட்கள் (தொடர்ச்சி)
=============================================

தேர்தல்
————

24-12-84 தமிழ் நாட்டில் பொதுத் தேர்தல் நடந்தது

28-12-84 தமிழ்நாட்டில் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. 234 இடங்களில் 132 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை அ.தி.மு.க. கைப்பற்றியது. ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர். 31,484 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

நிருபர்களுடன் சந்திப்பு
————————————
29-12-84 தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதைக் கேட்டு எம். ஜி. ஆர். மகிழ்ந்தார். அமெரிக்க ஆஸ்பத்திரியில் நிருபர்களைச் சந்தித்தார்.

மீண்டும் முதல் அமைச்சர்
————————————

31-12-84 சட்டசபை அ.தி.மு.க. தலைவராக (முதல் அமைச்சராக) மீண்டும் எம். ஜி. ஆரை அ.தி.மு.கழக எம்.எல்.ஏ.க்கள் தேர்ந்து எடுத்தனர். ‘

நெடுஞ்செழியன் பயணம்
————————————-

4-1-85 எம். ஜி. ஆரை சந்திக்க அமைச்சர் நெடுஞ்செழியன். தலைமைச் செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் அமெரிக்காவுக்குப் பயணம் ஆனார்கள்.

6-1-85 அமெரிக்காவில் நெடுஞ்செழியன் எம். ஜி. ஆரை சந்தித்துப் பேசினார்.

13-1-85 விரைவில் தமிழகம் திரும்பி முதல் அமைச்சராகப் பதவி ஏற்பதாக, கவர்னருக்கு எம்.ஜி. ஆர். கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்துடன் நெடுஞ்செழியன் சென்னை திரும்பினார்.

24-1-85 டெலிவிஷனில் இந்திரா இறுதி ஊர்வலக் காட்சியைப் பார்த்து எம். ஜி. ஆர். கண்கலங்கினார்.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *