POST: 2018-05-15T14:08:34+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-211
—————-

மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் எம். ஜி. ஆர். வாழ்க்கையில் 123 நாட்கள் (தொடர்ச்சி)
=============================================

கவர்னருக்குப் பதில்
————————————

25-1-85 இடைக்கால முதல் அமைச்சர் நியமிக்க லாம் என்று யோசனை தெரிவித்து. கவர்னர் குரானா எழுதிய கடிதத்துக்கு எம். ஜி. ஆர். பதில் எழுதினார். “நான் விரைவில் தமிழகம் திரும்பிப் பொறுப்பு ஏற்க இருப்பதால், தற்காலிக முதல் அமைச்சரை நியமிக்க அவசியம் இல்லை என்று தனது பதிலில் எம். ஜி. ஆர் . குறிப்பிட்டு இருந்தார்.

28-1-85 அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், புரூக்ளின் ஆஸ்பத்திரியில், எம். ஜி. ஆருக்கு வரவேற்பு விழா நடத்தினார்கள்.
புரூக்ளின் ஆஸ்பத்திரிக்கு எம். ஜி. ஆர் ரூ 3லட்சம் நன்கொடை வழங்கினார்.

2-2-85 அமெரிக்காவில் இருந்து எம். ஜி. ஆர். உடல் நலத்தோடு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டார்.

சென்னையில் வரவேற்பு

4-2-85 காலை 5-45 மணிக்கு முதல் அமைச்சர் எம். ஜி. ஆர். தன் மனைவி ஜானகி அம்மாளுடன் சென்னை வந்து சேர்ந்தார். பரங்கி மலை ராணுவ மைதானத்தில் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *