POST: 2018-06-18T10:25:32+05:30

மன்னாதி மன்னனுக்கு மற்றுமொரு மகுடம்
========================================
பத்மஸ்ரீ முனைவர் ஔவை நடராசன்
அவர்களின் சிறப்புரை
==================================
பகுதி-239
—————

எம்.ஜி.ஆருடைய மரணம் தமிழ்நாட்டில் பெருங்கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

கட்டுக்கடங்காத மக்களையும் அதிகளவில் போராடி உயிரிழந்த உணர்ச்சித் தமிழர்களையும் நிர்வகிக்கத் தமிழக அரசும் போலீஸ் அதிகாரிகளும் கடுமையாகப் போராடினர்.

அவரது மறைவுக்குப் பின், ஜானகி ராமச்சந்திரன் அவர்கள் அ. இ. அ.தி.மு.க.வின் பொறுப்பை ஏற்றார். அவரது “சத்யா ஸ்டுடியோ“ இப்போது ஒரு பெண்கள் கல்லூரியாக உள்ளது.

சென்னை தி.நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டை தமிழக அரசு நினைவு இல்லமாக மாற்றிப் பராமரித்து வருகிறது. சென்னை தியாகராய நகரில் உள்ள ஆற்காடு முதலித் தெருவில் அமைந்துள்ளது டாக்டர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லம்.

எம். ஜி.ஆர் இந்த இல்லத்தினை தனது அலுவலகமாகப் பயன்படுத்தி வந்தார். இல்லத்தின் முன்புறம் டாக்டர் எம்.ஜி.ஆர் கனவு இல்லம் எனும் அரைவட்ட வடிவிலான பெயர்ப் பலகை அமைக்கப்பட்டுள்ளது.

Tags: No tags

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *